10th Science Book Back Unit 23 in Tamil

10th Science – Biology – Unit 23 Book Back Questions with Answers in Tamil:

Samacheer Kalvi 10th Std Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Science uploaded and available below. 10th Standard New Science Syllabus 2022 – கணினி அறிவியல் 23 – காட்சித் தொடர்பு Science Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 10th Science Book Portion consists of  23 Units. Science Book Contain Physics 06 units, Chemistry 05 units, Biology 11 units  and Computer Science 01 units in Tamil. Check Unit-wise and Full Class 10th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 10th Science Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 10th Standard Science Book Back Answers and 10th Science Solution guide Book Back Answers PDF. See below for the New 10th Science Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 10th Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Science Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

அலகு 23: காட்சித் தொடர்பு Book Back Answers in Tamil

கணினி அறிவியல் – அலகு 23

காட்சித் தொடர்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?
அ) Paint
ஆ) PDF
இ_ MS Word
ஈ) Scratch

2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்
அ) கோப்புத் தொகுப்பு
ஆ) பெட்டி
இ) Paint
ஈ) ஸ்கேனர்

3. நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?
அ) Script area
ஆ) Block palette
இ) Stage
ஈ) Sprite

4. நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது?
அ) Ink scape
ஆ) Script editor
இ) Stage
ஈ) Sprite

5. பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?
அ) Block palette
ஆ) Block menu
இ) Script area
ஈ) Sprite




II. பொருத்துக.

1. நிரலாக்கப் பகுதி Script Area    – அ. குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes
2. கோப்புத் தொகுப்பு Folder      –  ஆ. அசைவூட்ட மென்பொருள் Animation software
3. ஸ்கிராச்சு Scratch                          – இ. நிரல் திருத்தி Edit programs
4. ஆடை திருத்தி Costume editor – ஈ. கோப்பு சேமிப்பு Store files
5. நோட்பேடு Notepad                       – உ. நிரல் உருவாக்கம் Build Scripts

விடை :
1 – உ, 2 – ஈ,  3 – ஆ, 4 – இ, 5 – அ




III. சுருக்கமாக விடையளி

1. ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?
விடை:

  1. அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுக்களையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஸ்கிராச்சு எனப்படும்.
  2. இது ஒரு காட்சி நிரல் மொழி.

2. திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுது.
விடை:
ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று பிரிவுகளைக் கொண்டது.

  1. ஸ்டேஜ் (Stage)
  2. ஸ்பிரைட் (Sprite)
  3. ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script editor)

(1) ஸ்டேஜ் (மேடை) :

  1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
  2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
  3. தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

(2) ஸ்பிரைட் :

  1. ஸ்கிராச்சு சாளரத்தின் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்டுகள் என்பர்.
  2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
  3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

(3) ஸ்கிரிப்ட் எடிட்டர் (அ) காஸ்டியூம் (ஒப்பனை) எடிட்டர் :
நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.

3. மேடை (STAGE) என்றால் என்ன? (அல்லது) ஸ்கிராச்சு சூழல் திருத்தியில் மேடை (STAGE) என்பது பற்றி சிறு குறிப்பு எழுதுக. (Sep.20)
விடை:

  1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
  2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
  3. தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

4. ஸ்பிரைட் (SPRITE) என்றால் என்ன?
விடை:

  1. ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் (Characters) ஸ்பிரைட்கள் என்பர்.
  2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
  3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

Other Important Links for Samacheer Kalvi Books PDF download with Answers:

Click Here for Complete 10th Science Samacheer Kalvi Book Back solutions – Samacheer Kalvi 10th Science Book Back Solutions in Tamil

Click Here to download the complete 10th Books PDF in English and Tamil Medium – Samacheer Kalvi 10th Books PDF Download