10th Tamil Unit 2.5 Book Back Questions with Answers

Samacheer Kalvi 10th Tamil unit 2.5 Book Back Questions with Answers:

Samacheer Kalvi 10th Std  Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 10th Standard New Tamil Syllabus 2022 – 2.5 தொகைநிலைத் தொடர்கள் Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 10th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 10th Tamil Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 10th Standard Tamil Book Back Answers and 10th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 10th Tamil Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

10th Tamil Book Back Answers

Chapter 2.5 – தொகைநிலைத் தொடர்கள்

 

கற்பவை கற்றபின்

வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

1.அன்புச்செல்வன் திறன் பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.
விடை:
அன்புச்செல்வன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
தொடுதிரை – வினைத்தொகை

2.அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.
விடை:
மோர்ப் பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
மோர் கொடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

3.வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
விடை:
வெண்டைக்காய்ப் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

4.தங்க மீன்கள் தண்ணீர்த் தொட்டியில் விளையாடுகின்றன.
விடை:
தங்கமீன்கள் – உவமைத்தொகை
தண்ணீர்த் தொட்டியில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை




மொழியை ஆள்வோம்

தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower’s fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
விடை:

இயற்கை

பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக்கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்து
இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்
விடை:
எ.கா: இன்சொல் – பண்புத்தொகை
இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.

  1. எழுகதிர் – வினைத்தொகை
    மனித வாழ்க்கை எழுகதிர் போன்றது.
  2. கீரிபாம்பு – உம்மைத்தொகை
    கலாவும் மாலாவும் கீரியும் பாம்பும் போல எப்பொழுதும் பகைமையோடு வாழ்கின்றனர்.
  3. பூங்குழல் வந்தாள் – அன்மொழித்தொகை
    பூ போன்ற கூந்தலையுடைய (குழல்) பெண் வந்தாள்
  4. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை
    குறிஞ்சி நில மக்கள் மலையின் கண் வாழ்வார்.
  5. முத்துப்பல் – உவமைத்தொகை
    மாலாவின் முத்துப்பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு, ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள், ஆல மலர்; பலா மலர்.

மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் : அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.

பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன : நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
– கோவை. இளஞ்சேரன்.

1.மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.
விடை:
மலருக்குப் பெயர் உண்டு.

2.அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
விடை:
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.

3.நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் அதன் பயன்களையும் எழுதுக.
விடை:
முருங்கைப்பூ:
இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும். குடித்துவர நீரழிவு நோய், நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவு ஆற்றல் பெருகும்.

எருக்கம் பூ:
எருக்கம் பூவைக் காய வைத்து பொடி செய்து புண்களில் பூச விரைவில் குணமாகும். கால் வீக்கம் குறைய இப்பூவை எண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் நீங்கும்.

4.அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.
விடை:
குறிப்புப் பெயரெச்சம்

5.தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
விடை:
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை, கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.

Other Important Links for 10th Tamil Book Back Answers/solutions:

Click Here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers