10th Tamil Unit 3.1 Book Back Questions with Answers

Samacheer Kalvi 10th Tamil unit 3.1 Book Back Questions with Answers:

Samacheer Kalvi 10th Std  Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 10th Standard New Tamil Syllabus 2022 – 3.1 விருந்து போற்றுதும்! Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 10th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 10th Tamil Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 10th Standard Tamil Book Back Answers and 10th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 10th Tamil Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

10th Tamil Book Back Answers

Chapter 3.1 – விருந்து போற்றுதும்!

 

கற்பவை கற்றபின்

1.வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவர்க்கு உணவிடல் இவை போன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க.
விடை:
அமுதன் : வீட்டில் திண்ணை அமைத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு வந்தாயா?
மதி : கேட்டேன். வழிப்போக்கர்கள் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் என்று அப்பா கூறினார்.
அமுதன் : விருந்தினர் பேணல் குறித்து உன் வீட்டார் உனக்கு கூறிய செய்தி யாது?
மதி : வணக்கம் கூறி வரவேற்றல், அமர வைத்தல், தண்ணீர் கொடுத்தல், உணவு உண்ணச்செய்தல் ஆகியவையே விருந்தினர் பேணும் முறையாகும் என்றனர்.
அமுதன் : ஈகை என்றால் என்ன என்பது பற்றி கேட்டாயா?
மதி : தமிழர் பண்பாட்டில் ஈகை குறித்தும் இலக்கியங்கள் கூறுகின்றன. பாரி என்ற குறுநில
மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்ததாகவும் பேகன் என்பவன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான் என்பதையும் நாம் பாடநூலில் படித்திருக்கிறோம் அல்லவா? அதுதான் ஈகை என்றனர்.
அமுதன் : ‘பசித்தவர்க்கு உணவிடல்’ குறித்து உன் பெற்றோர் கூறிய செய்திகளை எனக்கும் கூறு.
மதி : “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது இலக்கியம். பசித்துயரால் வாடுபவருக்கு உணவளிப்பது அவருக்கு புத்துயிர் வந்தது போன்றிருக்கும் என்று அம்மா கூறினார்.

2.“இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும் ………………” –

பாரதிதாசனார் இவ்வாறாகக் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் குறித்துப் பேசுக.
விடை:
வணக்கம்.
கிடைத்த இரையைப் பகிர்ந்துண்ணும் பொருட்டு புறாக்கள் வட்டமாய் அவ்விரையைச் சுற்றி கூடி நின்றன. இக்காட்சியானது இதழ் விரிந்திருக்கின்ற தாமரை மலரைப் போன்று காட்சியளிப்பதாக கவிஞர் உவமித்துள்ளார்.

மு.வரதராசனார் இயற்றிய குறட்டை ஒலி’ என்ற சிறுகதையில் ஓர் ஏழைத்தாய்தன்குழந்தைக்கு ஊட்ட வேண்டிய பாலால் பட்டினி கிடந்த நாய்க்குட்டிகளுக்கு ஊட்டுகிறாள். ஓர் ஏழைத்தாயின் வறுமையிலும் பகிர்ந்துண்ணும் தாய்மைப் பண்பு இக்கதையில் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலத்தில் பகிர்ந்துண்ணும் வழக்கம் அதிகமாக மனிதர்களிடம் காணப்படுவதில்லை. அன்றாடம் நாம் காணும் ஐந்தறிவு உயிரினமாகிய காக்கை கூட தனக்குக் கிடைத்த சிறிதளவு இரையையும் தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும் பொருட்டு கரைந்து தன் இனத்தை அழைத்து உண்கிறது. இத்தகைய உயிரினங்களின் செயல்களைக் கண்டாவது மனிதர்கள் பகிர்ந்துண்ணும் பழைய பண்பாட்டை நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் பசிப்பிணி நீங்கும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.




பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக

1.பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
விடை:
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

2.விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
விடை:
ஆ) இன்மையிலும் விருந்து

குறுவினா

1.‘தானியம் ஏதும் இல்லாதநிலையில்விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக்குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
விடை:
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருதமுடியாது. ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை யாரும் ஏற்கமாட்டார்கள். எனவே, செல்வத்தைவிட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

சிறுவினா

1.புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
விடை:

  • அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
  • காலமாற்றத்தால் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காணமுடிகின்றது.
  • வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
  • விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினர்களாகப் போற்றப்படுவது இல்லை.
  • இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.

நெடுவினா

1.உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
விடை:
முன்னுரை :
குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல் :
வீட்டிற்குவந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முகமலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

உணவு உபசரிப்பு :

  • வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
  • தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
  • வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன்.
  • வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
  • உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு :

  • ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
  • பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
  • உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
  • உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள
  • உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பிவைத்தேன்.

முடிவுரை:
விருந்தினர் பேணுதல் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும் அருளோடும் செய்தல் நனிசிறப்பாகும்.

Other Important Links for 10th Tamil Book Back Answers/solutions:

Click Here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers