Samacheer Kalvi 10th Tamil unit 6.6 Book Back Questions with Answers:
Samacheer Kalvi 10th Std Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 10th Standard New Tamil Syllabus 2022 – 6.6 அகப்பொருள் இலக்கணம் Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 10th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 10th Tamil Book back Solutions/Answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 10th Standard Tamil Book Back Answers and 10th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 10th Tamil Book Back Questions with Answer PDF:
Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
10th Tamil Book Back Answers
Chapter 6.6 – அகப்பொருள் இலக்கணம்
கற்பவை கற்றபின்
1.பண்டைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும் இன்றைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு ஒவ்வொருவர் கருத்தையும் பதிவு செய்து பொதுக் கருத்தை அறிக.
விடை:
பதிவு செய்யப்பட்ட கருத்துகள் கருத்து – 1:
காலங்கள் பல கடந்தாலும் தெய்வநம்பிக்கையும் சடங்குகளும் பெருமளவில் மாறாமல் உள்ளன. மக்களிடம் சாதி வெறியும் சாதி வேறுபாடும் நீங்கியுள்ளது. மக்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்குத் தகுதிபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து – 2:
உணவு முறையில் இன்று பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கையான தானியங்கள் மற்றும் பயிறு வகை உணவுப் பொருட்கள் பெரும்பாலும் உணவில் சேர்க்கப்படுவதில்லை.
கருத்து – 3:
தங்களுக்கெனக் குறித்த பண், யாழ், பறை ஆகியவற்றைப் பண்டைத் திணை நில தமிழர் பயன்படுத்தியதைப் போல இன்று யாரும் பயன்படுத்தவில்லை. அவரவர் விருப்பமான இசையை இசைப் பள்ளிகளுக்குச் சென்று கற்றுக் கொள்கின்றனர்.
கருத்து – 4:
திணை நிலத்திற்கேற்ப தொழில்கள் இன்று பெருமளவில் நடைபெறவில்லை. இயற்கையின் விளையாட்டால் இன்று மருதநில தொழில்களும், நெய்தல் நில தொழில்களும் மிகவும் நலிவடைந்துள்ளன. மேலும் அதிக வருமானம் பெறுவதற்காகவும் கல்வியறிவு பெற்று வருவதால் உயர் பதவியில் உள்ள வேலைகளைத் தேடி நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
கருத்து – 5:
இயற்கைச் சூழலும், நாகரிக வளர்ச்சியும், காலச் சூழலும் எல்லா நிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் பண்டைய மரபு மாறாது வாழ்கின்றனர்.
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்ப்பு:
Koothu
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient Puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.
விடை:
தமிழாக்கம் :
கூத்து
தெருக்கூத்து அதன் பெயருக்கு ஏற்றாற்போல் தெருவில் நடக்கும் ஒரு மிகச் சிறந்த கலை. இதில் கிராமப்புற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதன் கதைகள் பழங்காவியமான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் பழைய பாடல்களை உரையாடலுடன் கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சிறிய இசைக்குழுவாக சேர்ந்ததுதான் தெருக்கூத்து கூட்டம். இசைக்குழுவில் பல பாடல்கள் இருந்தபோதும் கலைஞர்கள் தங்கள் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் மிகச் சிறந்த உடையலங்காரமும் ஒப்பனையும் செய்திருப்பர். கிராமப் புறங்களில் கூத்துமிகவும் பிரபலமானது.
தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்.
1.ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.
விடை:
எ.கா: அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.
ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.
2.தொடர் சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலையைக் கொண்டு இருக்கும்.
விடை:
எ.கா: அ) இனிய நிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.
ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.
3.கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
விடை:
எ.கா: அ) மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.
பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் – முதன்மைத் தொடர்
மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் – துணைத் தொடர்
தொடர்களை அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
எ.கா: அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)
அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.
1.இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
விடை:
(தொடர் சொற்றொடராக மாற்றுக) இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கி, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
2.ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
விடை:
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.) ஒயிலாட்டக் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிந்து கொள்வர். கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
3.கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
விடை:
(கலவைச் சொற்றொடராக மாற்றுக) கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
4.ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
விடை:
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அதனால் அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைபட்டது.
மொழியோடு விளையாடு
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.
1. வானம் …………………….. தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் …………………….
3. ……………………. மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ……………………. புல்வெளிகளில் கதிரவனின் …………………….வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் …………………….விடும்.
விடை:
1. வானம்கருக்கத்தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது.
3. வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பச்சை புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் கருத்து விடும்.
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
- விரட்டாதீர்கள் – பறவைக்குமரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் ………………….. - காலை ஒளியினில் மலரிதழ் …………………..
சோலைப் பூவினில் வண்டினம் ………………….. - மலை முகட்டில் மேகம் ………………….. அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் ………………….. - வாழ்க்கையில் ………………….. மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் ………………….. கூத்து சொல்லும். - தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே …………………… – அதில்
வரும்காசு குறைந்தாலும் அதுவே அவர் …………………..
விடை:
1. விரட்டாதீர்கள் – பறவைக்குமரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும்மரவீடு. - காலை ஒளியினில் மலரிதழ்அவிழும்.
சோலைப் பூவினில் வண்டினம்கவிழும். - மலை முகட்டில் மேகம்தங்கும். அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத்தயங்கும். - வாழ்க்கையில்தோற்பவைமீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும். - தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலேவிருது. – அதில்
வரும்காசு குறைந்தாலும் அதுவே அவர்விருந்து.
அகராதியில் காண்க.
தால் – தாலாட்டு, தாலு, பிள்ளைக் கவியுறுப்பில் ஒன்று, நாக்கு.
உழுவை – ஒருவித மீன், புலி, தும்பிலி
அகவுதல் – அழைத்தல், ஆடல், கூத்தாடல்
ஏந்தெழில் – மிக்க அழகு, மிகு வனப்பு
அணிமை – சமீபம், அருகு, நுட்பம், நுண்மை.
Other Important Links for 10th Tamil Book Back Answers/solutions:
Click Here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers