10th Tamil Unit 7.1 Book Back Questions with Answers

Samacheer Kalvi 10th Tamil unit 7.1 Book Back Questions with Answers:

Samacheer Kalvi 10th Std  Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 10th Standard New Tamil Syllabus 2022 – 7.1 சிற்றகல் ஒளி Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 10th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 10th Tamil Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 10th Standard Tamil Book Back Answers and 10th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 10th Tamil Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

10th Tamil Book Back Answers

Chapter 7.1 – சிற்றகல் ஒளி

கற்பவை கற்றபின்

1.எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.
விடை:
பேரறிஞர் அண்ணா வாழ்வில் நிகழ்ந்ததைக் கூறுதல்.

அண்ணாவாகிய நான்,

என்னைப் பொறுத்தவரை, சிந்திப்பதும், படிப்பதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும்.
கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது, நான் ஆங்கில கட்டுரை ஒன்று எழுதினேன். அதனைப் படித்துப் பார்த்த என் பேராசிரியர், ‘பொருட் செறிவுடனும், நயமுடனும் இருக்கிறது. இதை எங்கிருந்து எடுத்தாய்’ என்றார்.

‘நான் இங்கிருந்து எடுத்தேன்’ என்று என் நெஞ்சைத் தொட்டுக் காட்டினேன். பேராசிரியர் வியப்புடனும், மகிழ்வுடனும் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.

பெரியாருடன் நான் இணைந்து பணியாற்றினேன். அப்போது இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் செல்வோம். வடநாட்டுப் பயணங்களில் பெரியாரின் தமிழ்ப்பேச்சை நானே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன்.

என் அழகான ஆங்கிலத்தால் கவரப்பட்ட மக்கள் அனைவரும் என்னையே பேசும்படி வற்புறுத்துவர். ஆனால் நான் நயமாக அவ்வலியுறுத்தலை மறுத்துவிடுவேன்.

எவ்வளவுதான் புலமை திறமை இருந்தாலும், ஒருவருடைய பேச்சை மொழிபெயர்க்க வந்ததை விட்டு தனியுரை நிகழ்த்த முற்படுவது, கண்ணியமற்ற செயல் அல்லவா! அதனை நான் செய்யலாமா? கண்ணியம் தவறக் கூடாதன்றோ

2.நீங்கள் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதைகள் பற்றி வகுப்பறையில் உரை நிகழ்த்துக.
விடை:
மாணவர்களே! சமீபத்தில் நான் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதை ‘சிவகாமியின் சபதம்’ ஆகும். இது ஒரு வரலாற்றுப் புதினம். இதனை எழுதியவர் அமரர் கல்கி ஆவார்.

12 வருடங்களாக வாரந்தோறும் ‘கல்கி’ வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பின்பே நூல் வடிவம் பெற்றது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்தி, எழுதப்பட்ட புதினம் ஆகும். முதலாம் நரசிம்ம பல்லவன் இப்புதினத்தில் முக்கிய இடம் பெறுகிறார். பரஞ்சோதியாத்திரை, காஞ்சி முற்றுகை, பட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது.

வாதாபியின் மீது பல்லவர் போர் தொடுத்தது, காஞ்சியின் போர்ச் சூழல், சாளுக்கிய நாட்டின் வரலாறு ஆகியவை சுவைபட எடுத்தியம்பப்பட்டுள்ளது. சமணர்களால் காஞ்சியால் ஏற்பட்ட மதமாற்றம் குறித்தும் கூறுகிறது.

பேரழகியான சிவகாமியையும், அவள் தந்தை ஆயனாரும் மதம் கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட செய்தியும் நயம்பட நவிலப்பட்டுள்ளது. மூலிகை ஓவியங்கள், அஜந்தா குகைகளில் உள்ள வண்ண ஓவியங்கள் குறித்தும் இப்புதினத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு ‘தன் காதலர் நரசிம்மவர்மர் பல்லவர் வாதாபி நகரை தீக்கிரையாக்கி தன்னை மீட்டுச் செல்லும் வரை, அந்நகரை விட்டு, வெளியேறுவதில்லை என்ற சூளுரைப் பகுதியையும் கல்கி நம் கண்முன் விரித்துக் காட்டுகிறார்.

மேலும் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், கடல்புறா என பல வரலாற்றுக் கதைகள் நம் சிந்தையைக் கொள்ளை கொள்ளும் வண்ணமாக மட்டுமின்றி, நற்றமிழை நாம் அறியும் வகையிலும் உள்ளது. மாணவர்களே நேரம் கிடைக்கும் போது, நூலகம் செல்லுங்கள். கற்று இன்புறுங்கள்.




பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே ……………..
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
விடை:
அ) திருப்பதியும் திருத்தணியும்

2.தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
விடை:
ஈ) சிலப்பதிகாரம்

குறுவினா

1.வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
விடை:

  • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
  • இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
  • இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
  • செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.

2.பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
விடை:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

சிறுவினா

1.‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
விடை:
இடம்:
‘ம.பொ.சி’யின் தன் வரலாற்றுப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

பொருள்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத் தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.

விளக்கம்:
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அப்பொழுது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் சென்னை’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.முன்மொழிந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று ம.பொ.சி முழங்கினார். 25.03.1953இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை, நாடாளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

நெடுவினா

1.நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப்பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
விடை:

‘மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’

அறிமுகவுரை:

அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

மாணவப்பருவமும் நாட்டுபற்றும்:

  • ‘நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்படுகிறது’ என்றார் நேரு. எனவே கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
  • சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்டு விழாக்களைக்கொண்டாடும்போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்படவேண்டும்.
  • அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை, வெள்ளையனே வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறத்தல் கூடாது.
  • செக்கடியிலும், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
  • மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப்பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்துக் கொண்டால் நாளை நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்.
  • கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே.
  • நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தல் வேண்டும்.
  • சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

நிறைவுரை:

நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்கள் செய்வோம் எனக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

Other Important Links for 10th Tamil Book Back Answers/solutions:

Click Here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers