Samacheer Kalvi 10th Tamil unit 9.3 Book Back Questions with Answers:
Samacheer Kalvi 10th Std Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 10th Standard New Tamil Syllabus 2022 – 9.3 தேம்பாவணி Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 10th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 10th Tamil Book back Solutions/Answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 10th Standard Tamil Book Back Answers and 10th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 10th Tamil Book Back Questions with Answer PDF:
Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
10th Tamil Book Back Answers
Chapter 9.3 – தேம்பாவணி
கற்பவை கற்றபின்
1.வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக.
விடை:
- வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழகத்தில் இருந்து தமிழ்ப்பணி ஆற்றினார்.
- சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார்.
- இலக்கியச் சுவடிகளைத் தேடி எடுத்ததால் “சுவடி தேடும் சாமியார்’ எனப்பட்டார்.
- திருக்குறள், தேவாரம், திருப்புகழ் போன்ற நூல்களைப் பிற ஐரோப்பிய மொழிகளில்
- மொழிபெயர்த்தார்.
- தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீனில் விளக்கம் அளித்து உள்ளார்.
- திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்தார்.
- 1728இல் புதுவையில் இவரின் பரமார்த்தக் குருவின் கதை நூல் முதல் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
- வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி இலக்கணம், உரைநடை என பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைக்கவில்லை.
- இத்தமிழ்ப் பணிகளை இவர் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ஆற்காடு வேலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் தங்கிப் பணியாற்றினார்.
2.கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மலைப் பொழிவுப் பகுதியைப் படித்து அதில் வரும் அறக் கருத்துகளை எழுதுக.
விடை:
மலைப் பொழிவின் அறக்கருத்துகள்:
- எளிய மனத்தோர் பேறு பெற்றோர்.
- வஞ்சமில்லாத நெஞ்சத்துடன், பிறரைப் பழி சொல்லாது வாழ்பவர் விண்ணரசு எய்துவார்.
- துயரம் அடைவோர் பேறு பெற்றோர் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
- சாந்தம் உடையவர் பேறு பெற்றவர்கள்; தரணி (உலகம்) முழுவதும் அவர்களுக்கு உரியது.
- நீதியின்மேல் பற்றுக்கொண்டு வாழ்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
- இரக்க சிந்தை உடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்களுக்கே இரக்கம் கிடைக்கும்.
- தூய மனதையுடையவர்கள் சிறப்புப் பெற்றவர்கள்; தோன்றும் கடவுளை அவர்கள் நேரில் காண்பர்.
- பிறர் வேதனை தீர்க்க, தம்மை வருத்தும் ஞானிகள் எவரோ, அவர்கள் விண்ணக அரசை அடைந்தே தீர்வர்.
- மனிதர்கள் பால் பகை கொண்டு, மடி நிறைய காணிக்கையை இறைவனுக்கு மட்டும் செலுத்துவதால் பயன் என்ன?
“ஊருக்குத் தீமைகள் செய்து – உன்
உள்ளம் மகிழ்வது பாவம்
யாருக்கும் தீமையில்லாமல் – நீ
அழிந்து விடுவதே லாபம்”
இவைபோன்ற இன்னும் பல அறக்கருத்துகள் “மலைப்பொழிவில்” இடம்பெற்று உள்ளன.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக
ஈ) எலிசபெத், பூமிக்காக
விடை:
அ) கருணையன், எலிசபெத்துக்காக
குறுவினா
1.காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?
விடை:
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்
உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.
சிறுவினா
1.எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
விடை:
- கருணையனாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
- அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
- உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
- காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.
“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”
நெடுவினா
1.கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரி.
விடை:
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி
- முடிவுரை
முன்னுரை:
தாயின் அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்லில் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.
வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி :
1) மலர்ப்படுக்கை :
கருணையனின் தாய் மறைந்துவிட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்ப்படுக்கையை பரப்பினான். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.
2) இளம்பயிர் வாட்டம்:
என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது. இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்போல் வாடுகிறது.
3) அம்பு துளைத்த வேதனை:
தீயையும் நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்ததால் ஏற்படும் புண்ணின் வரியைப் போல என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது வாடுகிறேன்.
4) தவிப்பு :
சரிந்த வழுக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழிதெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.
5) உயிர்கள் அழுதல்:
புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல கூச்சலிட்டன.
முடிவுரை:
வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலக்கணக் குறிப்பு.
காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய் மணி – வினைத்தொகை
உய்முறை – வினைத்தொகை
செய்முறை – வினைத்தொகை
மெய்முறை – வேற்றுமைத்தொகை
கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஒலித்து – வினையெச்சம்
வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பரப்பி – வினையெச்சம்
வீ – ஓரெழுத்தொருமொழி
தடவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லறம் – பண்புத்தொகை
இளங்கூழ் – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்.
Other Important Links for 10th Tamil Book Back Answers/solutions:
Click Here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers