Samacheer Kalvi 6th Civics Term 1 Unit 1 Social Book Back Question and Answers:
Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா- விடைகள் பருவம் 1 அலகு 1 – பன்முகத் தன்மையினை அறிவோம் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 10 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science Civics Book Back Unit 1 Term 1 Answers PDF in Tamil:
Samacheer Kalvi 6th Social Civics Book Back Unit 1 Term 1 Answers/Solutions Guide PDF:
6th Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அலகு 1: பன்முகத் தன்மையினை அறிவோம் பாடப்புத்தக வினா- விடைகள்.
சமூக அறிவியல் – குடிமையில்
பருவம் 1 – அலகு 1
பன்முகத் தன்மையினை அறிவோம்
I. சரியான விடையை தேர்வு செய்க:
1. இந்தியாவில் மாநிலங்களும், 4. யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
அ) 27, 9
ஆ) 29, 7
இ) 28, 7
ஈ) 28, 9
2. இந்தியா ஒரு _____ என்று அழைக்கப்படுகிறது.
அ) கண்டம்
ஆ) துணைக்கண்டம்
இ) தீவு
ஈ) இவற்றில் ஏதுமில்லை
3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ____ மாநிலத்தில் உள்ளது.
அ) மணிப்பூர்
ஆ) சிக்கிம்
இ) நாகலாந்து
ஈ) மேகாலயா
4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை ?
அ) சீக்கிய மதம்
ஆ) இஸ்லாமிய மதம்
இ) ஜொராஸ்ட்ரிய மதம்
ஈ) கன்ஃபூசிய மதம்
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______
அ) 25
ஆ) 23
இ) 22
ஈ) 26
6. ______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) பஞ்சாப்
ஈ) கர்நாடகா
7. மாநிலத்தின் _____ செவ்வியல் நடனம் ஆகும்.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) மணிப்பூர்
ஈ) கர்நாடகா
8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _____
அ) இராஜாஜி
ஆ) வ.உ.சி
இ) நேதாஜி
ஈ) ஜவகர்லால் நேரு.
9. ‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______
அ) ஜவகர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) அம்பேத்கார்
ஈ) இராஜாஜி
10. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.
அ) பெரிய ஜனநாயகம்
ஆ) தனித்துவமான பன்முகத்தன்னை கொண்ட நிலம்
இ) இனங்களின் அருங்காட்சியம்
ஈ) மதச்சார்பற்ற நாடு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
விடை: பொருளாதார
2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
விடை: ராஜஸ்தான்
3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______
விடை: 2004
4. பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
விடை: அசாம்
III. பொருத்துக:
1. நீக்ரிட்டோக்கள் | அ. மதம் |
2. கடற்கரை பகுதிகள் | ஆ. இந்தியா |
3. ஜொராஸ்ற்றியம் | இ. மீன்பிடித்தொழில் |
4. வேற்றுமையில் ஒற்றுமை | ஈ. இந்திய இனம் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. பன்முகத்தன்மையினை வரையறு.
விடை:
இந்தியர்களாகிய நாம் பல்வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகளைச் சார்ந்து வாழ்கிறோம். இதுவே பன்முகத் தன்மை எனப்படும்.
2. பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?
விடை:
- நில அமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத் தன்மை
- சமூக பன்முகத்தன்மை
- சமய பன்முகத்தன்மை
- மொழி சார். பன்முகத் தன்மை
- பண்பாடு பன்முகத் தன்மை
3. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
விடை:
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு ஆகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
4. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றைப் பற்றி எழுதுக.
விடை:
தீபாவளி – இந்துக்கள்
கிறிஸ்துமஸ் – கிறிஸ்தவர்கள்
ரம்ஜான் – இஸ்லாமியர்கள்
சில விழாக்களை பல்வேறு மதத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகக் கொண்டாடுகின்றனர்.
5. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.
விடை:
6. இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன் அழைக்கப் – படுகிறது?
விடை:
- இந்தியா மாறுபட்ட புவியியல் அமைப்பு, தட்ப வெப்பநிலை, தாவரங்கள், விலங்குகள், பலவகைப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கொண்டுள்ளது.
- இவ்வாறு இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.
V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி:
1. மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத் தன்மையினை விவரி.
விடை:
- இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
- தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
- இந்தியா ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது.
- இதனால் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக எழுச்சி பெற்றது.
- பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும், ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
பண்பாட்டு பன்முகத்தன்மை:
- பண்பாடு என்பது மக்களின் மொழி, உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள், இசை, கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
- ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.
- இது சமூக வடிவமைப்புகளால் முன்னிறுத்தப்படும் குழு அடையாளத்தின் வளர்ச்சி நிலை ஆகும்.
- கலை மற்றும் கட்டிடக்கலை ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.
- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபையும் நுண்ணிய கலைவெளிப்பாட்டு வடிவங்களையும் பெற்றிருக்கின்றன.
2. இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் – கலந்துரையாடுக.
விடை:
- இந்தியாபன்முகத்தன்மை நிறைந்த நாடு நாட்டுப்பற்று” என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம்.
- தேசியக்கொடி, தேசிய கீதம் தாய்நாட்டில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
- தேசிய விழாக்கள் கொண்டாடப்படுவதால் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துகின்றன.
- நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒரே தேசத்தால் ஒன்றுபட்டுள்ளோம்.
- விடுதலைப் போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்கின்றன