6th History Term 1 Unit 2 Solutions in Tamil

Samacheer Kalvi 6th History Term 1 Unit 2 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா- விடைகள் பருவம் 1 அலகு 2 – மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 10 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science History Book Back Unit 2 Term 1 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 6th Social History Book Back Unit 2 Term 1 Answers/Solutions Guide PDF:

6th Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அலகு 2: மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பாடப்புத்தக வினா- விடைகள்.

சமூக அறிவியல் –  வரலாறு

பருவம் 1 – அலகு 2

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

 

I. சரியான விடையை தேர்ந்தெடு

1. பரிணாமத்தின் வழிமுறை _____
அ) நேரடியானது
ஆ) மறைமுகமானது
இ) படிப்படியானது
ஈ) விரைவானது

2. தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது.
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா

II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
அ) கூற்று சரி.
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
இ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

III. சரியான இணையைக் கண்டுபிடி.

அ) ஆஸ்ட்ரலோபிதிகஸ்     – இரு கால்களால் நடப்பது

ஆ) ஹேமோ ஹபிலிஸ்         – நிமிர்ந்து நின்ற மனிதன்

இ) ஹேமோ எரல்டஸ்            – சிந்திக்கும் மனிதன்

ஈ) ஹேமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.

IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _____ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.

விடை: மானுடவியல் ஆய்வாளர்கள்

2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _____ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை: நாடோடி

3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _____ மற்றும் _____ ஆகும்.
விடை: வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்

4. _______ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
விடை: கலப்பை

5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
விடை: கரிக்கையூர்




V. சரியா, தவறா?

1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
விடை: தவறு

2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
விடை: சரி

3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
விடை: சரி

4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
விடை: தவறு

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

1. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
விடை:
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு முறை

2. தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள் ?
விடை:
அவர்கள் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள், மரங்களின் கிளைகள், இலைகள் ஆகியவற்றை அணிந்தார்கள்.

3. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
விடை:
அவர்கள் மரம், குகை மற்றும் மலையடிவாரத்தில் வாழ்ந்தார்கள்.

4. நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
விடை: எருது

5. மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
விடை:

  • விவசாயம் செயல்பாட்டுக்கு வந்த பின் மக்கள் விலங்குகளைப் பழக்கி, அவற்றையும் விவசாயத்தில் ஈடுபடுத்தினர்.
  • வேட்டையாடி வாழ்க்கை நடத்தியதை விட இந்த வாழ்க்கை எளிதாக இருந்தது. விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படிச் செய்தது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

1. பரிணாமம் என்றால் என்ன?
விடை:
மனித இனம் மாற்றங்களை அடைந்து, ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி பெறும் வழிமுறையைப் பரிணாமம் என்கிறோம்.

2. ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுதுக.
விடை:

  • அவர்கள் சுயமாக சிந்திக்கும் தன்மை பெற்றிருந்தனர்.
  • மனிதனைப் போன்ற தோற்றம் உடையவர்கள்
  • கரடு முரடான கருவிகளைப் பயன்படுத்தினர்
  • வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தனர்.

3. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
விடை:

  • அவர்கள் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்தனர்.
  • நிலத்தில் விவசாயம் செய்து வந்த அவர்கள், அந்த நிலத்தின் மண்வளம் குன்றி விட்டால் வேறொரு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.

4. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
விடை:

  • வேட்டையாடுதல் பழங்கால மக்களின் முக்கியத் தொழிலாகும்.
  • கல்லாலும், எலும்பாலும் செய்த கருவிகளைப் பயன்படுத்தினார்கள்
  • கூர்மையான கருவிகளைப் பயன் படுத்தினார்கள்
  • பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி போன்ற விலங்குகளை வேட்டையாடினர்.

5. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
விடை:
மரம் வெட்டவும், மரக்கிளைகளை நீக்கவும், குழிதோண்டவும், விலங்குகளின் தோலை உரிக்கவும் கோடரிகள் உருவாக்கப்பட்டன.

6. தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
விடை:
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.

7. மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன ?
விடை:

  • மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றிப் படிப்பது மானுடவியல் ஆகும்.
  • மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தை களிலிருந்து பெறப்பட்டது. anthrops என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ண ங்கள் அல்லது காரணம்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

1. பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
விடை:

  • சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
  • மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்தபோது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பழங்கால மக்கள் பெற்றிருக்கலாம்.
  • சக்கரத்தின் உதவியால் பானை செய்யக் கற்றுக் கொண்டனர்.
  • சக்கரத்தின் உதவியினால் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றனர்.
  • நவீன இயந்திரங்களில் சக்கரம் இல்லாத இயந்திரங்களே இல்லை எனலாம்.
  • இவ்வாறு சக்கரம் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.