6th Tamil Term 2 Chapter 1.2 Book Back Solutions

6th Tamil Term 2 Chapter 1.2 – துன்பம் வெல்லும் கல்வி Book Back Questions with Answers:

Samacheer Kalvi 6th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 6 New Tamil Book Back Answers Term 2 Chapter 1.2 – துன்பம் வெல்லும் கல்வி Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 6th Std Tamil Book Portion consists of  16 Units. Check Unit-wise and Full Class 6th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 6th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 6th Standard Tamil Book Back Answers and 6th Tamil guide Book Back Answers PDF. See below for the New 6th Tamil Book Back Questions with Answer PDF:




6th Samacheer Kalvi Book – unit 1.2 துன்பம் வெல்லும் கல்வி Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 6th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

6th Tamil Samacheer Kalvi Book Back Answers

Term 2 Chapter 1.2 – துன்பம் வெல்லும் கல்வி

 

1. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலை இசையுடன் பாடி மகிழ்க்.
Answer:
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே.

2. நூலகத்திற்குச் சென்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வேறு பாடல் ஒன்றை எழுதி வருக.
Answer:
மனித சக்தி
சந்திரனைத் தொட்டதின்று
மனித சக்தி
சரித்திரத்தை மீறியது
மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின்
அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது
மனித சக்தி
இந்திரனும் முடியரசாய்
இருக்கொணாது
எனும் குறிப்பைக் காட்டியது
மனித சக்தி
மந்திரமா வெறுங்கதையா
இல்லை ; இல்லை
மனித சக்தி.

3. ‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை ‘ என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
வணக்கம்! ‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை’ என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.
ஏட்டுக் கல்வி மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்வதற்கான சோதனைப் பணிதான். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களால் தனியாக ஓரிடத்திற்குச் செல்லவியலாது. சக மாணவர்களுடன் பழகுவதற்குக்கூடத் தெரியாது. பொது இடங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரியாது. பூட்டிய வீட்டைத் திறப்பதற்கு ஒரு திறவுகோல் எவ்வாறு பயன்படுகிறதோ அதே போன்று வாழ்க்கை என்ற வீட்டைத் திறப்பதற்கு ஏட்டுக்கல்வி பயன்படுகிறது. ஒருவன் படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆவதற்கு மட்டும் கல்வி உறுதுணையாக இருக்கக் கூடாது. அவன் கற்ற கல்வி சமூக சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் அனுபவக் கல்விதான் தேவை.

ஏட்டுக் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவன் வேலைக்குச் செல்ல வேண்டுமெனில் பல நேர்முகத் தேர்வுகளைச் சந்திக்கிறான். அவ்வாறு சந்திக்கும்போது அவனுக்குத் தேவை தகவல் பரிமாறும் திறன் (Communication Skill). அவனிடம் அத்திறன் இல்லையெனில் சுராவின் – தமிழ் உரைநூல் 1 6 ஆம் வகுப்பு ) இரண்டாம் பருவம் அவனுக்கு வேலை கிடைக்காது. அதனால் அதற்கென்று தனி வகுப்பு செல்கிறான். மாணவர்களின் திறமையைச் சோதிக்கும் தேர்வுகள் (aptitude test) இதற்கென்று தனிவகுப்புகள் செல்ல வேண்டியுள்ளது. அவன் படித்தக் கல்வியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை . அறுபது சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவன் பெரிய அலுவலங்களில் மிக எளிமையாகச் செல்கிறான். இவற்றால் நாம் அறிவது ஏட்டுக்கல்வியால் மட்டும் மாணவர்கள் முழுமையான கல்வியைப் பெறவியலாது.

மதிப்பீடு:

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் …………. நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
Answer: ஆ) தூற்றும்படி

2. நாம் …………… சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
Answer: இ) மூத்தோர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப்+பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
Answer: இ) கை + பொருள்

4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
Answer: ஆ) மானம்மில்லா




சொற்றொடரில் அமைத்து எழுதுக:

1. மனமாற்றம் – பெற்றோர் கூறிய அறிவுரையைக் கேட்டு கந்தன் மனமாற்றம் அடைந்தான்.
2. ஏட்டுக் கல்வி – ஏட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியும் பெறுதல் சிறப்பானது.
3. நல்லவர்கள் – நல்லவர்களுடன் சேர்ந்து பழகுதல் இன்பம் தரும்.
4. சோம்பல் – மாணவர்கள் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

குறுவினா:

1. நாம் யாருடன் சேரக் கூடாது?
Answer:
நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.

2. எதை நம்பி வாழக் கூடாது?
Answer:
பிறருடைய உழைப்பை நம்பி வாழக்கூடாது.

3. இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?
Answer:
இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
Answer:
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.

சிறுவினா:

1. நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
Answer:
(i) நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது; கற்றதன் பயனை மறக்கக்கூடாது.
(ii) நம் நாட்டின் நெறி தவறி நடக்கக்கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
(iii) பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக்கூடாது.

(iv) பிறருடைய உழைப்பில் வாழக்கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும்.

(v) பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(vi) மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும்.

(vii) பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும். நாம் இவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்யைார் கூறுகிறார்.

சிந்தனை வினா:

1. நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
Answer:
நான் படித்து மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன். ஏனெனில் மாவட்ட ஆட்சியரின் பணி ஒரு மாவட்டத்தையே பாதுகாக்கும் பணியாகும். அவருடைய அனுமதியின்றி பொது இடங்களைப் பயன்படுத்த முடியாது. எந்த அரசியல் கட்சிகளும் அவரை வழிநடத்த முடியாது. மக்கள் வாழும் இருப்பிடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது முதல் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாருதல் வரை அவருடைய இன்றியமையாதப் பணியாகும். அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளின் குறைகளை அவர் நினைத்தால் சரி செய்ய இயலும். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

நான் மாவட்ட ஆட்சியரானால் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களை அழைத்து வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை நோய்களின் தன்மை குறித்தும் அவற்றிலிருந்து நாம் நம்மைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தச் செய்வேன். பள்ளிகளில் தூய்மையாக இருப்பதின் அவசியத்தைக் கூறி பள்ளிகள் மூலம் மாணவர்களை அழைத்துக் கொண்டு சுத்தம் செய்ய வைப்பேன். நெகிழிப் பொருட்களைப் பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவேன்.

நிலம் கையகப்படுத்துதல், வரிப் பணம் நிலுவை, வேளாண் கடன்கள் நிலுவை இவையெல்லாம் இல்லாமல் செய்வேன். பஞ்சம் அல்லது தொற்று நோய்கள், இயற்கை அழிவுகளின் போது மருத்துவ முகாம் அமைத்து மக்களை நோய்கள் அணுகாமல் இருக்க வகை செய்வேன். சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பேன். இந்தியாவிலேயே என் ஆட்சியின் கீழ் உள்ள மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு என்னால் ஆன எல்லாப் பணிகளையும் செய்வேன்.

Other Important links for 6th Tamil Book Answers:

Click Here to download the complete Samacheer Kalvi 6th std Tamil Book Back Answers – 6th Standard Tamil Book Back Answers