6th Tamil Term 2 Chapter 2.3 – தமிழர் பெருவிழா Book Back Questions with Answers:
Samacheer Kalvi 6th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 6 New Tamil Book Back Answers Term 2 Chapter 2.3 – தமிழர் பெருவிழா Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 6th Std Tamil Book Portion consists of 16 Units. Check Unit-wise and Full Class 6th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 6th Tamil Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 6th Standard Tamil Book Back Answers and 6th Tamil guide Book Back Answers PDF. See below for the New 6th Tamil Book Back Questions with Answer PDF:
6th Samacheer Kalvi Book – unit 2.3 தமிழர் பெருவிழா Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 6th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
6th Tamil Samacheer Kalvi Book Back Answers
Term 2 Chapter 2.3 – தமிழர் பெருவிழா
1. உங்கள் ஊரில் கொண்டாடப்படும் பிற விழாக்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
எங்கள் ஊர் மதுரை. இங்கு பல விழாக்கள் கொண்டாடப்படும் அவ்விழாக்கள் பற்றிப் பேசுவதற்காக நாங்கள் இங்கு அழைக்கப்பட்டுள்ளோம்.
மாணவன் 1 : வணக்கம்! தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும். இவ்விழாவில் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியும் திருத்தேர் நிகழ்ச்சியும் மிக முக்கியமானதாகும். அதனைத் தொடர்ந்து பௌர்ணமி நாளன்று அழகர் கோவிலிருந்து விஷ்ணு பெருமாள் தங்கக் குதிரையில் தங்கையான மீனாட்சியின் திருமணத்தில் கலந்து கொள்ள வைகை ஆறு கடந்து மதுரைக்கு வரும் நிகழ்ச்சி அழகர் ஆற்றில் இறங்குதல்’ விழாவாகும். இவ்விழாவும் மதுரையில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற விழாவாகும்.
மாணவன் 2 : சித்திரைத் திருவிழாவிற்குப் பிறகு வைகாசி மாதத்தில் வைகாசி வசந்த உற்சவம் நடைபெறும். ஆனி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். உற்சவம் நடைபெறும் நாட்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி சன்னதியில் அமைந்துள்ள நூறுகால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்படத்திற்கு எழுந்தருள்வார். இவ்விழாவின் கடைசி நாளன்று சொக்கநாதப் பெருமானுக்கு முப்பழ அபிஷேகம் நடைபெறும்.
மாணவன் 1 : ஆனி மாதத்திற்கு அடுத்து ஆடி மாதத்தில் பத்து நாளைக்கு முளைக் கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. ஆவணி மாதத்தில் ஆவணி மூலத் திருநாள் கொண்டாடப்படும். நான்கு ஆவணி வீதிகளிலும் சுவாமி உலா வருவார். நான்கு சொக்கநாதர் நடத்திய திருவிளையாடல்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
மாணவன் 3 : புரட்டாசி மாதத்தில் ‘நவராத்திரி விழா’ ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி, கோலாட்டத் திருவிழா, பவித்ர .
உற்சவம் நடைபெறும்.
மாணவன் 1 : ஐப்பசி மாதத்திற்குப் பிறகு கார்த்திகை மாதம் இம்மாதத்தில் அனைத்துக் கோவில்களிலும் தீபத் திருவிழா நடைபெறும். இங்கு திருவண்ணாமலையில் நடைபெறுவது போலவே பத்து நாட்கள் 0 நடைபெறும். வீடுகளில் தீபம் ஏற்றி வைப்பர். வீதிகளில் ‘சொக்கர் பனை’ ஏற்றி வைத்துக் கொண்டாடுவர்.
மாணவன் 3 : அடுத்து நான் கூறுகிறேன். மார்கழி மாதத்தில் அஷ்டமி நாளில் சொக்கநாதரும் மீனாட்சி அம்மனும் உலா வருவர். இவ்வுலா வருவதன் நோக்கம் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதற்காக என்று கூறுவர். இம்மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருப்பர்.
மாணவன் 2 : மார்கழிக்கு அடுத்து வரும் மாதம் தை. இம்மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல்விழா கொண்டாடப்படும். மதுரையில் அறுவடை விழாவாகத்தொடங்கி பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் நிறைவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
மாணவன் 3 : தை மாதத்திற்கு அடுத்த மாதம் மாசி மாதம் வருகிறது. இம்மாதத்தில் மாசிமகத் திருவிழா நாற்பத்தெட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இம்மாதம் வரும் அமாவாசை நாளில் மகாசிவராத்திரி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர்.
மாணவன் 1 : பன்னிரண்டாம் மாதமான பங்குனி மாதத்தில் கோடை வசந்தவிழா பத்து நாட்கள் நடைபெறும். இவ்வாறு மதுரை மாநகரில் பன்னிரண்டு மாதங்களும் அதாவது ஆண்டு முழுவதும் விழாக்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கும். இரவு பகல் எனப் பாராமல் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு அழகுற விளங்கும். இதனால்தான் எம்மூர் தூங்கா நகர் என்றே அழைக்கப்படுகிறது.
மாணவன் 3 : சரியாகச் சொன்னாய். நம் ஊரைப் பற்றி இவ்வாறுசொல்லிக் கொண்டே போகலாம். விழாக்கள் பற்றி அறிய விரும்பினால் மதுரைக்கு
வாருங்கள்! விழாக்களைக் கொண்டாடி மகிழுங்கள்:
2. உங்கள் பள்ளியில் கொண்டாடப்படும் தேசியவிழாக்களின் பட்டியலை உருவாக்குக.
Answer:
(i) சுதந்திர தினம்
(ii) குடியரசு தினம்
(iii) குழந்தையர் தினம்
(iv) ஆசிரியர் தினம்
(v) தேசிய இளைஞர் தினம்
3. தமிழகத்தில் ஏறுதழுவுதல் நடக்கும் இடங்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஏறுதழுவுதல் நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது. உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
4. உங்களுக்குப் பிடித்த விழா எது? ஏன்?
Answer:
பௌர்ணமி என்பது மாதந்தோறும் வருகின்ற ஒருநாள். இந்நாள் இறைவனை வழிபடும் நாட்களுள் முக்கியமான நாளாகக் கருதுவர். தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படும். இந்நாளில் அனைத்துக் கோயில்களிலும் வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
சித்ரா பௌர்ணமி அன்று எங்கள் ஊரில் உள்ள ஆற்றங்கரைக்குச் செல்வோம். ஊர்மக்கள் அனைவரும் குழுமியிருப்போம். அங்கு இறைவழிபாடு நடைபெறும். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் ஒன்று கூடி உணவு உண்டு, விளையாடி, உரையாடியபடி ஓரிரவு மகிழ்ச்சியுடன் கழியும். நம் முன்னோர்கள் ஏற்படுத்திய இவ்விழாவில் ஓர் அறிவியல் உண்மையும் பொதிந்துள்ளது. சித்திரை மாதம் என்றால் கோடை வெயில் சுட்டெரிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவ்வெப்பத்தைச் சமாளிப்பதற்காக நீர்நிலையான ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளனர் நம் முன்னோர். ஆற்றங்கரையில் தென்னை, பனை மரங்கள் மற்றும் தாவரங்கள் இருப்பதால் இயற்கையான காற்றையும் நம்மால் சுவாசிக்க முடியும்.
நண்பர்கள், உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளதால் இவ்விழா எனக்கு மிகவும் பிடிக்கும்.
மதிப்பீடு:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கதிர் முற்றியதும் …………………. செய்வர்
அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்
Answer: அ) அறுவடை
2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ………………….. கட்டுவர்.
அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு
Answer: இ) தோரணம்
3. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல் அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்கஅன்று
Answer: அ) பொங்கலன்ற
4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………..
அ) போகி + பண்டிகை
ஆ) போ + பண்டிகை
இ) போகு + பண்டிகை
ஈ) போகிப் + பண்டிகை
Answer: அ) போகி + பண்டிகை
5. பழையன கழிதலும் …………… புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
Answer: அ) புதியன
6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ………. தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு
Answer: இ) துன்பம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக:
அ) பொங்கல் – பொங்கல் விழா கிராமங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆ) செல்வம் – செல்வத்திற்கு அழகு தன்னை நாடி வந்தவருக்கு உதவுதல்.
இ) பண்பாடு – தமிழர்கள் பண்பாட்டை மறவாமல் திருவிழாக்களைக் கொண்டாடுவர்.
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ……………. அறிமுகப்படுத்தினார்.
2. காமராசரைக் கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் …………………
Answer:
(விடை: சீருடை)
(விடை: தந்தை பெரியார்)
குறுவினா:
1. போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
Answer:
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
Answer:
உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துதல் :
மாடுகள் உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக விளங்குகின்றன. அதனால் உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றார்கள். மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.
சிறுவினா:
1. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
Answer:
(i) மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல் ஆகும்.
(ii) இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
(iii) குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்ப ர்.
(iv) மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.
சிந்தனை வினா
1. பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?
Answer:
(i) பெண்களுக்கான கோலப் போட்டிகள்
(ii) இளைஞர்களுக்கான வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மாடு பிடித்தல், கபடி விளையாட்டு
(iii) சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கயிறு தாண்டுதல், இசை நாற்காலி, பம்பரப்போட்டி போன்ற விளையாட்டுகள்.
(iv) கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பட்டிமன்றங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
(v) தப்பாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம்.
2. காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?
Answer:
(i) காணும் பொங்கலன்று மக்கள் தங்களுடைய உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
(ii) தற்கால இயந்திர வாழ்க்கையை மறந்து குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வர். இவ்வாறு வெளியில் செல்வதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு நாம் மற்றவர் வீட்டுக்குச் செல்வதாலும் மற்றவர் நம் வீட்டுக்கு வருவதாலும் நம்மிடையே உள்ள உறவு மேம்படும்.
(iii) ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் நாம் அறியாத செய்திகளை அறிந்து கொள்ளவும் புதிய அனுபவங்களைப் பெறவும் காணும் பொங்கல் உதவுகிறது. வாகனங்களுக்கு எரிபொருள் எவ்வளவு அவசியமோ நமக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம்.
Other Important links for 6th Tamil Book Answers:
Click Here to download the complete Samacheer Kalvi 6th std Tamil Book Back Answers – 6th Standard Tamil Book Back Answers