6th Tamil Term 3 Chapter 1.4 Book Back Solutions

6th Tamil Term 3 Chapter 1.4 – நால்வகைச் சொற்கள் Book Back Questions with Answers:

Samacheer Kalvi 6th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 6 New Tamil Book Back Answers Term 3 Chapter 1.4 – நால்வகைச் சொற்கள் Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 6th Std Tamil Book Portion consists of  16 Units. Check Unit-wise and Full Class 6th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 6th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 6th Standard Tamil Book Back Answers and 6th Tamil guide Book Back Answers PDF. See below for the New 6th Tamil Book Back Questions with Answer PDF:
6th Samacheer Kalvi Book – unit 1.4 நால்வகைச் சொற்கள் Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 6th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

6th Tamil Samacheer Kalvi Book Back Answers

Term 3 Chapter 1.4 – நால்வகைச் சொற்கள்

 

1. பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக.

1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.
2. நாள்தோறும் திருக்குறளைப் படி.
3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர்.
4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக.
மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
Answer:
1. வளவன், பேருந்து – பெயர்ச்சொல்
2. திருக்குறள் – பெயர்ச்சொல்
3. படி – வினைச்சொல்
4. மாநகர், சாலச்சிறந்தது – உரிச்சொல்
5. தீண்டல், இன்பம் – இடைச்சொல்

2. செய்தித்தாளில் விளையாட்டுச் செய்தி ஒன்றைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள நால்வகைச் சொற்களை எழுதுக.
Answer:
இந்தியா-இலங்கை இடையிலான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவராஜ்சிங்கிற்கு 3 முன்பாக இறங்கி 91 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்த தோனியின் செயல் சாலச் சிறந்த ஆட்டம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
விடை:
1. இந்தியா, இலங்கை, யுவராஜ் சிங், தோனி – பெயர்ச்சொல்
2. அடித்தது, செயல் – வினைச்சொல்
3. இடையிலான – இடைச்சொல்
4. சாலச் சிறந்த – உரிச்சொல்

மதிப்பீடு:

சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக.

1. அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு
2. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஓடினான்
3. அ) சென்ற ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்த
4. அ) மாநாடு ஆ) ஐ இ) உம் ஈ) மற்று
Answer:
1. அ) படித்தாள்)
2. ஈ) ஓடினான்
3. இ) சித்திரை)
4. அ) மாநாடு

குறுவினா:

1. சொல் என்றால் என்ன?
Answer:
ஒரு எழுத்து தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருபவை சொல் எனப்படும். எ.கா. பூ, கடல்

2. சொற்களின் வகைகளை எழுதுக.
Answer:
சொற்களின் வகைகள் நான்கு. அவை
(i) பெயர்ச்சொல்
(ii) வினைச்சொல்
(iii) இடைச்சொல்
(iv) உரிச்சொல்

3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?
Answer:
பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொற்களை இடைச்சொல் என்கிறோம்.
எ.கா. தம்பிக்கு – கு
திருக்குறளை – ஐ

சிந்தனை வினா:

1. நால்வகை சொற்களில் தனித்து இயங்குபவை எவை? எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
நால்வகைச் சொற்களில் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
எடுத்துக்காட்டு : பெயர்ச்சொல் ஆறு வகைகள்.

(i) பொருட்பெயர் – புத்தகம், இராமன்
(ii) இடப்பெயர் – சென்னை, பள்ளி
(iii) காலப் பெயர் – ஆண்டு, குளிர்காலம்
(iv) சினைப் பெயர் – கண், காது
(v) குணப்பெயர் (பண்புப்பெயர்) – பசுமை, வட்டம்
(vi) தொழிற்பெயர் – ஓடுதல், பாடுதல்

வினைச்சொல் :
(i) ஓடினான்
(ii) போ
(iii) எழுது
(iv) வந்தான்
(v) சென்றான்

மொழியை ஆள்வோம்:

1. தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவரின் வரலாற்றைக் கேட்க.
Answer:
“மறை. திருநாவுக்கரசு’ அவர்களின் வாழ்க்கை வரலாறு :
(i) மறை. திருநாவுக்கரசு தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் மகன் ஆவார். இவர் தம் தந்தையின் விருப்பப்படியும், எண்ணப்படியும் திருவையாற்றில் தமிழ்க் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.

(ii) சென்னை நுங்கம்பாக்கம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியிலும், திருநெல் வேலியில் குலசேகரன் பட்டினம் திருவள்ளுவர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 1952 முதல் 1967 வரை தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். 1967இல் பணி ஓய்வு பெற்றார்:

(iii) 1937-ல் இந்திமொழி கட்டாயமாக்கப்பட்டது. அதனை எதிர்த்து தமிழகத்தில் பெரும் போராட்டம் ஏற்பட்டது. அதில் கலந்து கொண்டு 1938இல் சிறைப்பட்டார். பெரியார், அண்ணாதுரை ஆகியோருடன் சிறையில் இருந்தவர். இவருடைய மனைவி ஞானம்மாள் தம் ஐந்து வயது குழந்தையுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

(iv) மறை திருநாவுக்கரசு ஒரு காந்தியவாதி. காந்தியடிகள் தொடங்கிய அறப்போராட்டத்தில் அரசை எதிர்த்து மேடைகளில் பேசினார். திரு.வி.க.வுடன் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து இந்திய விடுதலைக்காக உரிமைக்குரல் கொடுத்தார். 1941 சனவரி முப்பது முதல் ஓராண்டு சிறையில் இருந்தார்.

(v) சிவநெறி, நாயன்மார்களின் வரலாறு பற்றி சொற்பொழிவுகள் செய்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்பு, மலேசியா, பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்று சமயச் சொற்பொழிவாற்றி உள்ளார். சேக்கிழார் திருப்பணிக் கழகத்தைத் தொடங்கியவர்.

(vi) மறைமலையடிகள் வரலாறு, நீலாம்பிகை வரலாறு பெரிய புராண ஆய்வுரை போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக

1. பாரதியார்
2. காந்தியடிகள்
3. வேலுநாச்சியார்

1. பாரதியார்
(i) பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்திதான் என்ற பெயர்களுக்கெல்லாம் சொந்தக்காரர் சுப்பிரமணிய பாரதியார், எட்டயபுரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பதினோராம் நாள் சின்னச்சாமி – இலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

(ii) பாரதியார் ஒரு கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், பத்திரிக்கையாசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வர்.

(iii) தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 15 வயதில் தனது அத்தையுடன் காசிக்குச் சென்றார். இந்துக் கலாசாலையில் சமஸ்கிருதம், இந்தி மொழிகளும் கற்றார். பன்மொழி படித்து, வேத உபநிடதங்கள் படித்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைப் பெற்றார். தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பன்மொழிப் புலமை பெற்ற பாரதியார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனப் பாடியுள்ளார்.

(iv) தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைப்பட்டவர். தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தைத் தணிக்க 1905ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். பாரதியாருக்கு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிக்க தேவியைச் சந்தித்தார். அவரைத் தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.

(v) இந்தியா என்னும் வார ஏட்டையும், பால பாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.

(vi) பாரதியார் மொழி, இனம், நாடு, சமுதாயம் என்னும் அனைத்துத் துறைகளையும் விடுதலை விழிகளாகப் பார்த்தார். அவருடைய பேச்சு, மூச்சு, செயல் அனைத்துமே விடுதலையாகவும் அதைச் சார்ந்த சமுதாய விடுதலையாகவும் அமைந்தது.
2. காந்தியடிகள்

(i) இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் காந்தியடிகள். இவர் ‘மகாத்மா காந்தி’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

(ii) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார். பெற்றோர் காபாகாந்தி-புத்திலிபாய் ஆவர்.

(iii) காந்தி பள்ளிப் பருவத்திலேயே நேர்மையாளராகத் திகழ்ந்தார். அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். வாய்மையாளராய் விளங்கினார். ‘சிரவண பிதுர்பத்தி என்னும் நூலைப் படித்தார். பெற்றோரை மதிக்கும் குணம் பெற்றார். பதினெட்டு வயதில் இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞர் கல்வியை முடித்துத் திரும்பினார்.

(iv) தென் ஆப்பிரிக்கா சென்றார். டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்டதும், இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, வெள்ளையர் இல்லை என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும் அவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

(v) தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்கள் மற்றும் அங்கு குடியேறிய இந்திய மக்கள் படும் இன்னல்கள் அவரை மாற்றியது. தென் ஆப்பிரிக்காவில் போராடிய போது தில்லையாடி வள்ளியம்மை இவருக்கு அறிமுகமானார்.

(vi) காந்தியடிகள் பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அவ்வாறு வந்தபோது – புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் 5 இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். இந்திய மக்கள் போதிய உடைகள் இல்லாமல் இருப்பதைப் பற்றிச் சிந்தித்தார். அதனால் ஏற்பட்ட மாற்றமே காந்தியடிகளின் எளிமைத் திருக்கோலம் ஆகும்.

(vii) விடுதலை பெறுவதற்காக அவர் கண்ட புதுவழி அறவழி. ‘கத்தியின்றி இரத்தமின்றி’ புதிய அகிம்சை வழியில் போராடினார். ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், தனியாள் அறப்போராட்டம் எனப் பல வழிகளில் விடுதலைக்குப் போராடி விடுதலை பெற்றுத் தந்தார்.

(viii) அறவழி (அகிம்சை) என்றால் காந்தியடிகளே நம் நினைவிற்கு வருவார். அப்படிப்பட்ட ஒரு தலைவர் நாதுராம் கோட்சே என்ற கொடியவனால் 1948, சனவரி 30ஆம் நாள் கொல்லப்பட்டார். பாரதத் தாய்க்காகத் தன் இன்னுயிரையும் தந்து அனைவரின் மனதிலும் வாழ்கிறார்.

3. வேலுநாச்சியார்

(i) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார்.

(ii) இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து. சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகளாகத் தோன்றியவர்தான் வேலுநாச்சியார். இவர் ஆண்களைப் போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி முதல் அனைத்துப் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் சிவகங்கையை ஆண்ட மன்னரான முத்துவடுகநாதரை மணந்து கொண்டார்.

(iii) ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின் மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார். வேலுநாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து, ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.

(iv) மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். ஒரு விஜயதசமி நாளில் இப்போர் நடந்தது. அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் யார்?
Answer:
சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் வ.உ.சிதம்பரனார்.

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
Answer:
வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

3. வ.உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
Answer:
வ.உ.சி. பாரதியாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்.

4. வ.உ.சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?
Answer:
வ.உ.சி. அவர்களின் பன்முகத்தன்மை :
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்.

5. வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
Answer:
வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் :
தமிழ், ஆங்கிலம்.

இடம் அறிந்து பயன்படுத்துவோம்:

ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ‘ஓர்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ‘ஒரு’ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) ஓர் ஊர்
ஓர் ஏரி ஒரு நகரம் – ஒரு கடல்

இவை போலவே, உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ‘அது’ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) அஃது இங்கே உள்ளது
அது நன்றாக உள்ளது

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக:

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
Answer:
ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்த து ஒருநாள்.
Answer:
ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
Answer:
அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
Answer:
அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

5. அது ஒரு இனிய பாடல்.
Answer:
அஃது ஓர் இனிய பாடல்.

அகரவரிசைப்படுத்துக:

பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.

(i) பழங்க ள்
(ii) பாரதம்
(iii) பின்னிரவு
(iv) பீலி
(v) புதுமை
(vi) பூமி
(vii) பெண்க ள்
(viii) பேருந்து
(ix) பையன்
(x) பொதுக்கூட்டம்
(xi) போக்குவரத்து

செயல் திட்டம்:

காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றிய படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
samacheer kalvi 6th tamil Book back Answer Term 3
மொழியோடு விளையாடு:

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.
(எ.கா.) எனக்கு – எனக்குண்டு – எனக்கில்லை..
6th tamil book back ans

கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக

6th Tamil Solutions
Answer:
1. பாரி வீட்டுக்கு வந்தான்.
2. எழிலி வீட்டுக்கு வந்தாள்.
3. மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
4. மாடு வீட்டுக்கு வந்தது.
5. மாடுகள் வீட்டுக்கு வந்தன.

கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக:

6th tamil Book Back Solution Term 3
எ.கா : குமரன் – பெயர்ச்சொல்

மறைந்துள்ள நால்வகைச் சொற்கள் :
1. பேருந்து – பெயர்ச்சொல்
2. வண்டி – செய்தான்
3. மாடு – பெயர்ச்சொல்
4. நகரம் – பெயர்ச்சொல்
5. நடக்கிறாள் – வினைச்சொல்
6. பெயர்ச்சொல் – வினைச்சொல்
7. மற்று – இடைச்சொல்
8. ஐ – இடைச்சொல்
9. மாநகரம் – உரிச்சொல்
10. உறுபசி – உரிச்சொல்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்
1. தாய் தந்தையின் வீட்டு வேலைகளில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
2. பள்ளி, பொது இடங்களில் உள்ள பொருட்களை உடைக்காமல் பாதுகாப்பேன்.
3. தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண், தேசியக்கொடி முதலியவற்றிற்கு உரிய மரியாதை தருவேன்.

கலைச்சொல் அறிவோம்:

1. நாட்டுப்பற்ற – Patriotism
2. இலக்கியம் – Literature
3. கலைக்கூடம் – Art Gallery
4. மெய்யுணர்வு – Knowledge of Reality

Other Important links for 6th Tamil Book Answers:

Click Here to download the complete Samacheer Kalvi 6th std Tamil Book Back Answers – 6th Standard Tamil Book Back Answers