Samacheer Kalvi 7th Civics Term 1 Unit 1 Social Book Back Question and Answers:
Samacheer Kalvi 7th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 7 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா – விடைகள் பருவம் 1 அலகு 1 – சமத்துவம் Answers/Solutions are provided on this page. 7th Std Social Book is of 1st Term consists of 10 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 7th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 7th Social Science Civics Book Back Unit 1 Term 1 Answers PDF in Tamil:
Samacheer Kalvi 7th Social Civics Book Back Unit 1 Term 1 Answers/Solutions Guide PDF:
7th Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அலகு 1: சமத்துவம் வினா- விடைகள்.
சமூக அறிவியல் – குடிமையியல்
பருவம் 1 – அலகு 1
சமத்துவம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை ?
அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை
இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
2. கீழ்க்க ண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
3. இந்தியாவில் ளளககம் தான் னைத்து கடும் உரிமை வமங்கப்ப வயது ____________
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 31
4. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
அ) இயற்கை சமத்துவமின்மை
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
இ) பொருளாதார சமத்துவமின்மை
ஈ) பாலின சமத்துவமின்மை
5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1981
ஆ) 1971
இ) 1991
ஈ) 1961
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. குடிமை சமத்துவம் ______________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
விடை: சட்டத்து
2. ____________ முதல் ____________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
விடை: 14, 18
3. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ____________ உரிமை ஆகும்.
விடை: அரசியல்
4. சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
விடை: சமூக அறிவியல்
III. குறுகிய விடையளி
1. சமத்துவம் என்றால் என்ன?
விடை:
சமத்துவம் என்பது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.
2. பாலின சமத்துவம் ஏன் தேவையானது?
விடை:
பாலின சமத்துவம் தேவையானது. ஏனெனில்:
பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.
3. குடிமை சமத்துவம் என்றால் என்ன ?
விடை:
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே எந்த பாகுபாடும் இருத்தல் கூடாது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
IV. விரிவான விடையளி
1. சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சமத்துவத்தின் முக்கியத்துவம் :
- சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும்.
- சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது.
- மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படும் போது மட்டுமே பொருளுடையதாக இருக்கும்.
- குடிமை சமத்துவம், சமூக சமத்துவம், அரசியல் சமத்துவம், பாலின சமத்துவம் ஆகியவற்றைப் பெற வேண்டும்.
- சமத்துவம் தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. மேலும் சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடாகும்.
2. அரசியல் சமத்துவம் என்றால் என்ன?
விடை:
அரசியல் சமத்துவம் :
இந்தியா தன்னுடைய குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கிறது. அரசியல்
உரிமைகள் :
வாக்களிக்கும் உரிமை – பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை – அரசை விமர்சனம் செய்யும் உரிமை குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.
- இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
- 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 25 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
- மக்கள் அரசை விமர்சிக்கலாம். மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம்.
- நாட்டின் பிரதமரின் வாக்கும், ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.
3. இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் :
உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதே போன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14
- 18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
- சட்டப்பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது.
- சட்டப்பிரிவு 15 – பாகுபாட்டை தடை செய்கிறது.
- சட்டப்பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
- சட்டப்பிரிவு 17 – தீண்டாமையை ஒழிக்கிறது.
- சட்டப்பிரிவு 18 – பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் - சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 ல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.
V. உயர் சிந்தனை வினா
1. பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்?
விடை:
பள்ளிகளில் சமத்துவமின்மையை அகற்றுதல் :
திறன் குழுக்கள் குறித்த மறு சிந்தனை; வகுப்பறையில் மாணவர்களின் பல்வேறு குழுக்கள் அமைத்தல் பற்றி முயற்சி செய்தல், முன்னரே கருத்துருவாக்கம் செய்யப்பட்ட திறன் அடிப்படையில் தனியான செயல்பாடுகளை உருவாக்குவதற்குப் பதில் மாணவர்கள் பல்வேறு பயிற்சிகள் மூலமாக பல நிலைகளிலான சவால்களை மேற்கொள்ளுதல்.
திறந்த முடிவுகளுடன் கூடிய அதிக செயல்பாடுகளை கொடுப்பதன் மூலம் பல்வேறு அளவிலான திறன்களை ஈர்த்து பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுதல்.
மாணவர்களை இணைந்து செயல்பட அனுமதித்தல். ஒரு மாணவன் எழுதுவதில் திறமை கொண்டிருக்கலாம். மற்றொரு மாணவன் அதிக படைப்பாற்றல் மிக்கவராய் இருக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி தங்களையே வியந்து நோக்க உதவுதல்.
மொழித்திறனை சரிபார்க்கவும். ஆசிரியர் மாணவர்களை விவரிக்கும் மற்றும் வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள்ளே பயன்படுத்தும் மொழியையும் கவனிக்கவும்.
ஏற்ற பாடச் செயல்பாடுகளை உருவாக்கவும், எல்லா நேரமும், எல்லா மாணவர்களுக்கும் ஏற்ற செயல்பாடுகளை உருவாக்குவது இயலாது. ஆனால் மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
உடனடி தண்டனைகளை தவிர்க்கவும். தண்டனைகளுக்குப் பதிலாக எங்கே உரையாடல் மூ லம் தீர்வுகாண இயலும் என்பதைப் பரிசீலனை செய்யவும்.
உறவுகளைப் பலப்படுத்துவோம். வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு மற்றும் மாணவர்களுக்கிடையிலான உறவு மிகவும் அவசியம். இது மாணவர்களை, எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு நபராக, நடுநிலை திறன் கொண்ட ஒரு குழந்தையாக அனுமதிக்கிறது.
VI. வாழ்வியல் திறன்
Other Important Links for 7th Std Social Book Back Solutions Tamil:
Click Here to download Complete Samacheer Kalvi 7th Social Book Back Answers in Tamil- 7th Social Science Book Back Answers Tamil