7th Geography Term 2 Unit 2 Solutions in Tamil

Samacheer Kalvi 7th Geography Term 2 Unit 2 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 7th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 7 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா – விடைகள் பருவம் 2 அலகு 2 – சுற்றுலா Answers/Solutions are provided on this page. 7th Std Social Book is of 1st Term consists of 10 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  7th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 7th Social Science Geography Book Back Unit 2 Term 2 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 7th Social Geography Book Back Unit 2 Term 2 Answers/Solutions Guide PDF:

7th Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அலகு 2: சுற்றுலா வினா- விடைகள்.

சமூக அறிவியல் – புவியியல்

பருவம் 2 – அலகு 2

சுற்றுலா

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ______________
அ) சமயச் சுற்றுலா
ஆ) வரலாற்றுச் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) பொழுதுபோக்குச் சுற்றுலா
விடை: அ) சமயச் சுற்றுலா

2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
அ) இராஜஸ்தான்
ஆ) மேற்கு வங்காளம்
இ) அசாம்
ஈ) குஜராத்
விடை: இ) அசாட்

3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
அ) கோவா
ஆ) கொச்சி
இ) கோவளம்
ஈ) மியாமி
விடை: ஈ) மியாமி

4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
அ) குஜராத்திலுள்ள நல்சரோவர்
ஆ) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இ) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
விடை: ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
அ) தருமபுரி
ஆ) திருநெல்வேலி
இ) நாமக்கல்
ஈ) தேனி
விடை: ஆ) திருநெல்வேலி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது.
விடை: A3

2. ‘காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் ___________ அம்சத்தை குறிக்கின்றது
விடை: கலாச்சார

3. சுருளி நீர்வீழ்ச்சி ___________ என்றும் அழைக்கப்படுகிறது
விடை: நிலநீர்வீழ்ச்சி / மேகமலை நீர்வீழ்ச்சி

4. இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ___________
விடை: மெரினா கடற்கரை

5. TAAI என்பதன் விரிவாக்கம் ___________.
விடை: இந்திய பயண முகவர்கள் சங்கம்

III. பொருந்தாததை வட்டமிடுக:

1. போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்
விடை: போக்குவரத்து

2. நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா
விடை: திகா

3. கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி
விடை: மயானி

4. ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு
விடை: களக்காடு

5. ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி
விடை: கோத்தகிரி




IV. பொருத்துக:

விடை:
7th Social in Tamil

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்:

1. கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது
காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

2. கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.
காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்கவும்:

1. சுற்றுலா வரையறுக்க.
விடை:

  • சுற்றுலா என்பது மகிழ்ச்சி, மனநிறைவு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டது.
  • இது கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது.

2. சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • இயற்கைச் சூழலில் செழித்து வளரும் தாவரங்களும், விலங்குகளும் உள்ள இடங்களுக்குச் செல்வது “சூழல் சுற்றுலா” எனப்படுகிறது.
  • (எ.கா) அமேசான் மழைக்காடுகள், இமயமலை சிகரங்களில் மலையேற்றம்.

3. சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:

  • ஈர்ப்புத் தலங்கள்
  • எளிதில் அணுகும் தன்மை
  • சேவை வசதிகள்

4. இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக
விடை:

  1. கொடைக்கானல் – தமிழ்நாடு
  2. நைனிடால் – உத்திரகாண்ட்
  3. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்
  4. ஸ்ரீநகர் தம் – ஜம்மு காஷ்மீர்
  5. ஷில்லாங் – மேகாலயா

5. தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. மெரினா கடற்கரை – சென்னை
  2. இராமேஸ்வரம் கடற்கரை – இராமேஸ்வரம்
  3. மகாபலிபுரம் கடற்கரை – மகாபலிபுரம்
  4. முட்டம் கடற்கரை – கன்னியாகுமரி
  5. கன்னியாகுமரி கடற்கரை – கன்னியாகுமரி

VII. வேறுபடுத்துக:

1. பன்னாட்டுச் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சுற்றுலா
விடை:
7th Social Book Answers in Tamil

2. சமயச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா
விடை:
7th Social Science Book Back Answers in Tamil

3. ஈர்ப்புத் தலங்கள் மற்றும் எளிதில் அணுகும் தன்மை
விடை:
7th Social Answers in Tamil

VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்:

1. சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக
விடை:

  1.  நிலத்தோற்றம் : மலைகள், பீடபூமிகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பள்ளத்தாக்குகள், குகைகள், மணல் குன்றுகள், பனியாற்று நாற்காலி பவளப்பாறைகள், ஓங்கல்கள்.
  2. நீர்நிலைகள் : ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் வெந்நீர் மற்றும் கொதிநீர் ஊற்றுகள், பனி மற்றும் பனியாறுகள், நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள்.
  3. தாவரங்கள்: காடுகள், புல்வெளிகள், பெருவெளிகள், பாலை வனங்கள்.
  4. காலநிலை: சூரிய ஒளி, மேகங்கள், சிறந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பனி.
  5. விலங்குகள் : வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல்
  6. குடியிருப்புக் காரணிகள்: நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள், வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள்
  7. கலாச்சாரம் : மக்களின் வாழ்க்கை முறை. பாரம்பரியம். நாட்டுப்புற வழக்கங்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள்

2. தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
விடை:
தமிழ்நாட்டில் மலைகளும் ஆறுகளும் இணைந்து பல அருமையான நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளன. அடர்த்தியான பச்சை மரங்களுக்கிடையில் செங்குத்தான குன்றுகளில் மலையேற்றம் செய்வதும் மலைகளிலிருந்து பாயும் நீரில் குளிப்பதும் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது.
7th Social Answers in Tamil

3. சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை விவரிக்கவும்
விடை:
சுற்றுலாவிற்குச் சுற்றுச்சூழலின் தரம் மிக அவசியமாகும்.
நேர்மறையான தாக்கம்:

  • நேரடியான நிதி பங்களிப்பு
  • அரசாங்க நிதிக்குப் பங்களிப்பு
  • மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்
  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்தல்
  • பாதுகாப்பு மற்றும் பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல்எதிர்மறை தாக்கம் :
  1. இயற்கை வளங்கள் சிதைவுறுதல் :
    • நீர் வளங்கள்
    • உள்ளூர் வளங்கள்
    • நிலச்சீரழிவு
  2. மாசுபடுதல் :
    • காற்று மற்றும் ஒலி மாசு
    • திடக்கழிவு மற்றும் குப்பைகள்
    • கழிவுநீர்

சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும் மாற்றம்:

  • காற்று
  • நீர்
  • மண்

IX. சிந்தனை வினா (HOTS):

1. இயற்கைக் காட்சிகளைப் பார்வையிடுவதை நாம் ஏன் விரும்புகிறோம்?
விடை:

  • நாம் அனைத்து முக்கியமான இடங்களையும் பார்க்க விரும்புகிறோம். ஏனெனில் அதைப்பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போதே அறிந்திருக்கிறோம்.
  • அது நமக்கு உண்மையான அனுபவத்தை கொடுக்கிறது.
  • மலைகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாட்டை அறிய முடிகிறது.
  • இயற்கை காட்சியை பார்வையிடுவதால் மகிழ்வு அடைகிறோம்.

2. சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை?
விடை:

  • சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகளை பாதுகாக்கவும் உயிரோடு வாழவிடவும் உதவுகிறது.
  • காடுகளையும், தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும்.
  • மரங்களையும், செடிகளையும் பாதுகாக்க வேண்டும்.
  • அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான விலங்குகளை அது இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க விடுதல் மிகச்சிறந்த வழியாகும்.

3. பயணம் செய்வதற்கான ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • வேலை தேடுவதற்காக
  • மேற்படிப்புக்காக
  • பிற கலாச்சாரத்தை பயில்வதற்காக விடுமுறை காலத்தை செலவழிப்பதற்காக
  • சாதனை புரிய, ஓய்வு எடுப்பதற்காக

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது):

இந்தச் செயல்பாடு , பாட ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களால் செய்யப்பட வேண்டும்.

1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுவாக மாணவர்களைப் பிரிக்க வேண்டும்
2. ஒவ்வொரு மாணவரும் தங்கள் கடைசி சுற்றுப் பயணத்தைப் பற்றிக் குழுவில் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு குழுவும் புகைப்படங்களையும் தகவல்களையும், சேகரிக்க வேண்டும்.
3. சுற்றுப் பயணத் தகவல்களை அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல், வகுப்பு அறையில் அறிவிப்புப் பலகையில் தகவல்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

Other Important Links for 7th Std Social Book Back Solutions Tamil:

Click Here to download Complete Samacheer Kalvi 7th Social Book Back Answers in Tamil- 7th Social Science Book Back Answers Tamil