Samacheer Kalvi 7th History Term 1 Unit 4 Social Book Back Question and Answers:
Samacheer Kalvi 7th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 7 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா – விடைகள் பருவம் 1 அலகு 4 – டெல்லி சுல்தானியம் Answers/Solutions are provided on this page. 7th Std Social Book is of 1st Term consists of 10 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 7th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 7th Social Science History Book Back Unit 4 Term 1 Answers PDF in Tamil:
Samacheer Kalvi 7th Social History Book Back Unit 4 Term 1 Answers/Solutions Guide PDF:
7th Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அலகு 4: டெல்லி சுல்தானியம் பாடப்புத்தக வினா- விடைகள்.
சமூக அறிவியல் – வரலாறு
பருவம் 1 – அலகு 4
டெல்லி சுல்தானியம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. _______________ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அ) முகமதுகோரி
ஆ) ஜலாலுதீன்
இ) குத்புதீன் ஐபக்
ஈ) இல்துமிஷ்
2. குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
அ) லாகூர்
ஆ) புனே
இ) தௌலதாபாத்
ஈ) ஆக்ரா
3. ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
அ) ரஸ்ஸியா
ஆ) குத்புதீன் ஐபக்
இ) இல்துமிஷ்
ஈ) பால்பன்
விடை:
இ) இல்துமிஷ்
4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பிரோஷ் ஷா துக்ளக்
இ) ஜலாலுதீன்
ஈ) கியாசுதீன்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்
விடை: கியாசுதீன் துக்ளக்
2. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.
விடை: தேவகிரி
3. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை __________ ஆதரித்தார்.
விடை: பால்பன்
4. டெல்லியிலுள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
விடை: குத்புதீன் ஐபக்
5. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் _____________ ஆட்சியின் போது ஏற்பட்டது.
விடை: இல்துமிஷ்
III. பொருத்துக
IV. சரியா, தவறா?
1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்
விடை: தவறு (குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்)
2. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
விடை: சரி
3. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
விடை: தவறு (இல்துமிஷ் ஐபக்கின் மருமகன்)
4. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ்ஷா மறுத்துவிட்டார்.
விடை: சரி
V. சரியான விடையை (✓) டிக் செய்யவும். கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக.
அ) கூற்று : மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் : செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணமும் கூற்றும் தவறானவை.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ) சரியான இணையைத் தேர்வு செய்க.
1. ஹொய்சாளர் – தேவகிரி
2. யாதவர் – துவாரசமுத்திரம்
3. காகதியர் – வாராங்கல்
4. பல்லவர் – மதுரை
விடை:
3. காகதியர் – வாராங்கல்
இ) தவறான கூற்றினை கண்டறியவும்.
- 1206 இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்.
- ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.
- மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்.
- இப்ராகிம் லோடி 1526 இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
2) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.
VI. கீழ்க்காண்பனவற்றிற்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
1. முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன?
விடை:
ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் இக்தா’
2. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
விடை:
ஆக்ரா நகரத்தை சிக்கந்தர் லோடி நிர்மாணித்தார்.
3. கி.பி (பொ. ஆ) 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
விடை:
முகமது கோரி 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவினார்.
4. ‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர் கொள்வதற்காக இல்துமிஷ் – துருக்கியப் பிரபுக்கள் நாற்பது பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு சகல்கானி அல்லது நான்பதின்மர் எனப்பட்டது.
5. அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?
விடை:
அலாவுதீன் கில்ஜி வடக்கே பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை தன் வசமாக்கினார். அவரது படைத் தளபதியான மாலிக் கபூர் மூலம் தெற்கே தேவகிரியை ஆண்ட யாதவர்கள், துவார சமுத்திரத்தின் ஹொய்சாலர்கள், வாராங்கல்லின் காகதீயர்கள் மற்றும் மதுரைப் பாண்டியர்கள் ஆகியோர் அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். இவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்.
6. பிரோஷ்ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
விடை:
- பிரோஷ்ஷா துக்ளக் கல்லூரிகள், மசூதிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கட்டினார்.
- பல மனிதாபிமான நடவடிக்கைகளையும் அவர் மேற் கொண்டார்.
- மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார்.
- அநேக வரிகளை ரத்து செய்தார்.
- விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார்.
- பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டினார்.
- 1200 புதிய தோட்டங்களை உருவாக்கினார்.
VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்.
1. 1398 ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
விடை:
- தைமூர் சாமர்கண்ட் பகுதியை ஆட்சி செய்தார்.
- இவர் வட இந்தியாவுக்கு மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
- 1938 ல் இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்தார்.
- டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கொள்ளையடித்தார்.
- தங்கம், வெள்ளி, நகைகள் எனப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து எடுத்துச் சென்றார்.
- திரும்பிச் செல்லும் போது தச்சு வேலை செய்வோர் மற்றும் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கலைஞர்களை சாமர்க்கண்டிற்கு அழைத்துச் சென்றார்.
VIII. உயர் சிந்தனை வினா
1. முகமது பின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
விடை:
- முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராய் இருந்தார்.
- இந்தியா முழுவதையும் தனது நாடாக்க வேண்டும் என கனவு கண்டார்.
- தலைநகரை மாற்றிய அவரது திட்டம் தோல்வி கண்டது.
- துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு, வரியை பணமாகவே செலுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார். இதுவும் மக்களுக்கு பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது.
- முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்துமே சிறந்தவைகளாகும். ஆனால் சூழ்நிலையை அறிந்து அவைகள் நடைமுறைப் படுத்தப் படவில்லை. எனவே அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன,
- அவரது அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
IX. வரைபட வினா
1. இந்திய ஆறுகள் வரைபடத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி எல்லையையும் கீழ்க்காணும் பகுதிகளையும் குறிப்பிடுக.
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)
- டெல்லி
- தேவகிரி
- லாகூர்
- மதுரை
X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)
1. பொருத்துக
2. டெல்லி சுல்தானியத்தின் இஸ்லாமிய கலை, கட்டடக் கலை தொடர்பான படங்களைக் கொண்டு செருகேடு (ஆல்பம் ) ஒன்றைத் தயார் செய்யவும்.
Other Important Links for 7th Std Social Book Back Solutions Tamil:
Click Here to download Complete Samacheer Kalvi 7th Social Book Back Answers in Tamil- 7th Social Science Book Back Answers Tamil