Samacheer Kalvi 7th Science Term 1 Unit 3 Book Back Question and Answers/Solutions in Tamil:
Samacheer Kalvi Class 7th Std Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 7th Standard New Syllabus 2022 to 2023 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா – விடைகள் பருவம் 1 அலகு 3 – நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Answers/Solutions Guide are provided on this page. 7th Std Science Book is of 1st Term consists of 7 units, 2nd and 3rd Term consists of 6 units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Science Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 7th New Science Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. 7th Std English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Science Book Back Solutions below. See below for the Samacheer Kalvi 7th Science Term 1 Chapter 3 Book Back Answers PDF:
Samacheer Kalvi 7th Science Book Back Chapter 3 Term 1 Answers/Solutions Guide PDF:
7th Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அலகு 3: நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் பாடப்புத்தக வினா – விடைகள்
7th அறிவியல் – பருவம் 1 அலகு 3
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
அ) இரும்பு
ஆ) ஆக்சிஜன்
இ) ஹீலியம்
ஈ) தண்ணீ ர்
2. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?
அ) உலோகம்
ஆ) அலோகம்
இ) உலோகப்போலிகள்
ஈ) மந்த வாயுக்கள்
3. கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை.
அ) கணித வாய்ப்பாடு
ஆ) வேதியியல் வாய்ப்பாடு
இ) கணிதக் குறியீடு
ஈ) வேதியியல் குறியீடு
4. அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
அ) குளோரின்
ஆ) சல்பர்
இ) பாதரசம்
ஈ) வெள்ளி
5. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
அ) அலோகம்
ஆ) உலோகம்
இ) உலோகப்போலிகள்
ஈ) வாயுக்கள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள்
விடை: அணு
2. ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட __________ சேர்மம்
விடை: கார்பன் டை ஆக்சைடு
3. _____________ மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம்.
விடை: கிராஃபைட்
4. தனிமங்கள் _____________ வகையான அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
விடை: ஒரே
5. சில தனிமங்களின் _______________ லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்படுகின்றன.
விடை: குறியீடுகள்
6. இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை __________.
விடை: 118
7. தனிமங்கள் தூய பொருள்களின் ____________ வடிவம்.
விடை: எளிமையான
8. தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே _____________ எழுத்தால் எழுத வேண்டும்.
விடை: பெரிய
9. மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகளை _____________ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.
விடை: பல அணு
10. _____________ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.
விடை: நைட்ரஜன்
III. ஒப்புமை தருக
1. பாதரசம் : அறை வெப்பநிலையில் திரவம் :: ஆக்சிஜன் : ____________
விடை: அறை வெப்பநிலையில் வாய
2. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் : _____________ :: மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் : தாமிரம்.
விடை: கிராஃபைட்
3. தனிமங்கள் : இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன :: சேர்மங்கள் : ______________
விடை: சிதைந்து தனிமங்களை உருவாக்குகின்றது
4. அணுக்கள் : ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள் :: ______________ : ஒரு சேர்மத்தின் அடிப்படைத் துகள்.
விடை: மூலக்கூறுகள்
IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
1. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்களைக் கொண்டிருக்கலாம்.
விடை: தவறு – இரண்டு வேறுபட்ட தனிமங்களில் வெவ்வேறு விதமான அணுக்கள் இருக்கும்
2. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூய பொருள்களாகும்.
விடை : சரி
3. அணுக்கள் தனித்து இருக்க முடியாது; அவை மூலக்கூறுகள் எனப்படும் குழுக்களாகவே உள்ளன.
விடை: தவறு – அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியும்
4. NaCl என்பது ஒரு சோடியம் குளோரைடு மூலக்கூறைக் குறிக்கிறது.
விடை: தவறு – சோடியம் குளோரைடில் (NaCl)ல் ஒரு சோடியம் அணு மட்டுமே உள்ளது)
5. ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்
விடை: சரி
V. சுருக்கமாக விடையளி
1. கீழ்க்காணும் சேர்மங்களின் வேதியியல்வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
அ) சோடியம் குளோரைடு
ஆ) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
இ) கார்பன் டை ஆக்சைடு
ஈ) கால்சியம் ஆக்சைடு
உ) சல்பர் டை ஆக்சைடு
விடை:
2. கீழ்க்கண்ட மூலக்கூறுகளைத் தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளாக வகைப்படுத்தவும்.
விடை:
1. தனிமத்தின் மூலக்கூறு
2. சேர்மத்தின் மூலக்கூறு
3. தனிமத்தின் மூலக்கூறு
4. சேர்மத்தின் மூலக்கூறு
3. ஒரு சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன ?
விடை:
- வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் ஒரு மூலக்கூறினை சுருக்கமாக குறிப்பிடக்கூடிய முறையாகும்.
- வேதியியல் வாய்ப்பாடு ஒரு மூலக்கூறில் உள்ள தனிமங்கள் மற்றும் அவற்றின் அணுக்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
4. கீழ்க்காண்பவற்றை தக்க உதாரணத்துடன் வரையறு.
அ) தனிமம்
ஆ) சேர்மம்
இ) உலோகம்
ஈ) அலோகம்
உ) உலோகப் போலிகள்
விடை:
அ) தனிமம்:
பருப்பொருளின் எளிமையான வடிவம் தனிமம் எனப்படும். எ.கா. ஹைட்ரஜன் (H)
ஆ) சேர்மம்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதி பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் சேர்மம் ஆகும். எ.கா. நீர் (H2O)
இ) உலோகம்:
பளபளப்பான, கடினமான, சிறந்த கடத்திகளாக, தகடாக மாற்றக்கூடிய பல்வேறு வடிவங்களைப் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள தனிமங்கள் உலோகங்கள் எனப்படும். எ.கா. தாமிரம் (Cu)
ஈ) அலோகம்:
பளபளப்பற்ற, மிருதுவான, கடத்தும் தன்மையற்ற, தகடாக மாற்ற இயலாத, பல்வேறு வடிவங்களை பெற இயலாத வகையில் அமைந்துள்ள தனிமங்கள் அலோகங்கள் எனப்படும். எ.கா. கார்பன் (C)
உ) உலோகப் போலிகள்:
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் உலோகப் போலிகள் எனப்படும். எ.கா. சிலிக்கன் (Si)
5. கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதி அவற்றை திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.
விடை:
6. கீழ்க்காணும் தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக. சோடியம், பிஸ்மத் வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்,
விடை:
7. கீழ்க்காண்பவற்றை தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என வகைப்படுத்துக. தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன் டை ஆக்சைடு, அயோடின் மற்றும் அலுமினியம்.
விடை:
8. கீழ்க்காணும் தனிமங்களின் வேதியியல் குறியீட்டை எழுதுக.
அ) ஹைட்ரஜன்
ஆ) நைட்ரஜன்
இ) ஓசோன்
ஈ) சல்பர் மூலக்கூறு
விடை:
9. தனிமங்கள் என்றால் என்ன? அவை எவற்றால் ஆனவை? இரண்டு உதாரணம் தருக.
விடை:
- பருப்பொருள்களின் எளிமையான வடிவம் தனிமங்கள் எனப்படும்.
- தனிமங்கள் ஒரே வகையான அணுக்களால் உருவானது
- எ.கா. ஹைட்ரஜன், ஆக்சிஜன்
10. மூலக்கூறு – வரையறு.
விடை:
இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட அணுக்கள் ஒரு குறிப்பிட்டவிகிதத்தில் வேதிப்பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் மூலக்கூறு ஆகும். எ.கா. H2, HCl
11. சேர்மங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.
விடை:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதிபிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் சேர்மங்கள் எனப்படும்.
எ.கா. HCl, NH3
12. லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட தனிமங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
- காப்பர் – குறியீடு ‘Cu’ அதன் லத்தீன் பெயரான “குப்ரம்” என்பதிலிருந்து பெறப்பட்டது.
- தங்கம் – குறியீடு ‘ Au’ அதன் லத்தீன் பெயரான “ஆரும்” என்பதிலிருந்து பெறப்பட்டது.
3. ஒரு தனிமத்தின் அணுக்கட்டு எண் என்றால் என்ன?
விடை:
அணுக்கட்டு எண் என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் ஒரு மூலக்கூறில் அடங்கியுள்ள ஒட்டு மொத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகும்.
4. கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுக.
விடை:
- (H2SO4) மூலக்கூறில் 2 ஹைட்ரஜன் அணுக்கள், 1 சல்பர் அணு மற்றும் 4 ஆக்சிஜன் அணுக்கள் உள்ளன.
- எனவே அதன் அணுக்கட்டு எண் = 2 + 1 + 4 = 7
VI. விரிவாக விடையளி
1. உலோகங்கள் மற்றும் அலோகங்களை வேறுபடுத்துக.
விடை:
2. சேர்மங்களின் பண்புகளை விவரிக்கவும்.
விடை:
- தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைவதால் சேர்மங்கள் உருவாகின்றன.
- சேர்மத்தின் பண்புகள் அதிலுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
- சேர்மங்களை இயற்பியல் முறையில் அதன் உறுப்புக் கூறுகளாக பிரிக்க இயலாது.
- சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாக பிரிக்க இயலும்.
3. தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு வழிமுறைகளை விவரி.
விடை:
பொருத்தமான உதாரணம் தருக.
- தனிமங்களின் குறியீட்டில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
- பெரும்பாலான தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து கொண்டு குறிக்கப்படுகிறது.
- எ.கா.
- ஹைட்ரஜனுக்கு ‘H’, – ஆக்சிஜனுக்கு ‘O’
- ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களின் பெயர்கள் ஒரே எழுத்தில்
- ஆரம்பிக்கும்போது, அப்பெயர்களின் முதல் இரண்டு எழுத்துகளை
- குறியீடாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எழுதும்போது
- முதல் எழுத்தை பெரிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தைச் சிறிய எழுத்திலும் எழுத வேண்டும்.
- எ.கா.
- கார்பனுக்கு ‘C’
- கால்சியத்துக்கு ‘ Ca’
- குளோரினுக்கு ‘CI’
- குரோமியத்துக்கு ‘Cr’
- சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் லத்தீன் பெயர்களிடமிருந்து பெறப்பட்டவை.
- எ.கா.:
- காப்பருக்கு அதன் லத்தீன் பெயர் “குப்ரம்” என்பதிலிருந்து ‘Cu’
- தங்கத்திற்கு அதன் லத்தீன் பெயர் “ஆரும்” என்பதிலிருந்து ‘ Au’
4. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துக.
விடை:
5. சேர்மங்களின் பண்புகளுள் ஏதேனும் ஐந்தை எழுதுக.
விடை:
- தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து சேர்மங்கள் உருவாகின்றன.
- சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளில் இருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
- சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலாது.
- ஏனெனில் சேர்மங்களில் உள்ள தனிமங்கள் வேதிபிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன.
- ‘சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க இயலும்.
6. உலோகம் மற்றும் அலோகத்தின் பண்புகளை ஒப்பிட்டு, ஒவ்வொன்றிற்கும் மூன்று உதாரணங்கள் தருக.
விடை:
7. உலோகப் போலிகளின் பண்புகளை எழுதவும்.
விடை:
- உலோகப் போலிகள் திண்மங்கள்
- உலோகப் போலிகள் பளபளப்பானவை
- உலோகப் போலிகள் உடையும் தன்மை கொண்டவை
- உலோகப் போலிகள் மின்சாரத்தை சிறிதளவு கடத்தும் திறன் கொண்டவை
VII. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை சரியான வடிவத்தில் எழுதவும்
1. தனிமங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டவை. சேர்மங்கள் ஒரே வகையான அணுக்களை மட்டும் கொண்டவை.
விடை:
தனிமங்கள் ஒரே வகையான அணுக்களை மட்டும் கொண்டது. சேர்மங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டது.
VIII. உயர் சிந்தனை வினாக்கள்
1. உனது வீடு மற்றும் பள்ளியில் நீ பயன்படுத்தக்கூடிய உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகளைப் பட்டியலிடவும். அவற்றின் பண்புகளை ஒப்பிடவும்.
விடை:
- உலோகங்கள்:
- காப்பர் (தாமிரம்) – பாத்திரங்கள், மின்கம்பிகள்
- வெள்ளி, தங்கம் – அணிகலன்கள்
- இரும்பு – ஜன்னல்கள், கதவுகள்
- பண்புகள்:
- உலோகங்கள் பளபளப்பான, கடினமான திண்மங்கள்.
- வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும் திறன் கொண்டவை.
அலோகங்கள்: - நீர்: ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற இரு அலோகங்களால் ஆனது.
- காற்று: நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் ஒரு அலோகம்
- பிளீச்சிங் பவுடரிலிருந்து வெளிப்படும், நீரை சுத்திகரிக்க பயன்படும் குளோரின் வாயு ஒரு அலோகம்.
- பண்புகள்:
- அலோகங்கள் பளபளப்புத் தன்மையற்ற, மிருதுவான திண்மங்கள், திரவங்கள் அல்லது வாயுக்கள்.
- வெப்பம் மற்றும் மின்சாரத்தை அரிதிற் கடத்தும் தன்மை கொண்டவை.
- உலோகப் போலிகள்:
- கணினியின் பகுதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் சிலிக்கன் ஒரு உலோகப்போலி.
- பண்புகள்:
- உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகங்களின் பண்புகளைக் கொண்டவை.
- சிலிக்கன் மின்சாரத்தை பகுதியளவு கடத்தும் ஒரு திண்மம்.
2. ஆகாஷ் பகல் நேரங்களில் அவனுடைய வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தாழ்ப்பாளைத் திறக்கச் சிரமமாக உள்ளது என்பதைக் கவனித்தான். ஆனால், அதே தாழ்பாளை இரவு நேரங்களில் திறக்க எளிமையாக உள்ளது என்பதையும் கவனித்தான். தாழ்ப்பாளும், நுழைவுவாயிலும் பகல் நேரத்தில் வெயிலில் இருப்பதை ஆகாஷ் உற்று நோக்கினான்.
அ) வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கருதுகோளை உருவாக்கு.
ஆ) நீங்கள் கூறும் கருதுகோளை எவ்வாறு சோதிக்கலாம் என்பதை சுருக்கமாகக் கூறுக.
விடை:
அ) ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தும் போது, அதன் பருமன் அதிகரிக்கின்றது. இந்நிகழ்விற்கு விரிவடைதல் என்று பெயர்.
ஆ)
(i) ஒரு வளையத்தின் வழியே சரியாக நுழையக் கூடிய அளவில் ஒரு இரும்பு குண்டினை எடுத்துக் கொள்ளவும்.
(ii) இரும்பு குண்டினை நன்கு வெப்பப்படுத்தவும். உலோகம் என்பதால் நன்கு வெப்பமேறிய இரும்பு குண்டு விரிவடைகிறது. எனவே வளையத்தின் வழியாக இரும்பு குண்டினால் நுழைய இயலவில்லை.
3. வெப்பப்படுத்தும் போது துகள்களின் இயக்கம் மற்றும் அமைப்பில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கவும்.
விடை:
- திண்மத்தை வெப்பப்படுத்தும்போது அதன் துகள்கள் ஆற்றலைப் பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றன.
- இதனால் துகள்கள் ஒன்றையொன்று சற்றுப் பிரிந்து செல்கின்றன.
- இதன் காரணமாக பருப்பொருளின் பருமன் அதிகரிக்கின்றது. இந்நிகழ்விற்கு விரிவடைதல் என்று பெயர்.
- துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கின்றது. எனவே பருமன் அதிகரிக்கின்றது.
- ஆனால் துகள்களின் பரிமாணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே அளவில் இருக்கின்றன.
- பருப்பொருளின் நிறையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டம், சதுரம், முக்கோணம் போன்றவை வெவ்வேறு தனிமத்தின் அணுக்களைக் குறிக்கின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து, கீழ்க்கண்டவற்றைக் கண்டுபிடிக்கவும்.
அ) சேர்மங்களின் மூலக்கூறுகள்
ஆ) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்
இ) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
விடை:
அ) சேர்மங்களின் மூலக்கூறுகள்
ஆ) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்
இ) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
IX. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
1. கூற்று : ஆக்சிஜன் ஒரு சேர்மம்.
காரணம் : ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
2. கூற்று : ஹைட்ரஜன் ஒரு தனிமம்.
காரணம் : ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
3. கூற்று : காற்று ஒரு சேர்மம் ஆகும்.
காரணம் : காற்றில் கரியமில வாயு உள்ளது.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
4. கூற்று : காற்று தனிமங்களின் கலவை.
காரணம் : நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
5. கூற்று : பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம்.
காரணம் : பாதரசம் ஒரு அலோகம்.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
Other Important links for 7th Science Tamil Book Answers:
Click here to download the complete samacheer kalvi 7th std Science in Tamil Book Back Solutions – 7th Science Book Back Answers Tamil