7th Tamil Term 3 Chapter 2.3 – ஒப்புரவு நெறி Book Back Questions with Answers:
Samacheer Kalvi 7th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 7 New Tamil Book Back Answers Term 3 Chapter 2.3 – ஒப்புரவு நெறி Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 7th Std Tamil Book Portion consists of 21 Units. Check Unit-wise and Full Class 7th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 7th Tamil Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 7th Standard Tamil Book Back Answers and 7th Tamil guide Book Back Answers PDF. See below for the New 7th Tamil Book Back Questions with Answer PDF:
7th Samacheer Kalvi Book – unit 2.3 ஒப்புரவு நெறி Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 7th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
7th Tamil Samacheer Kalvi Book Back Answers
Term 3 Chapter 2.3 – ஒப்புரவு நெறி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது……….. நெறி.
அ) தனியுடமை
ஆ) பொதுவுடைமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
Answer: ஆ) பொதுவுடைமை
2. செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு.
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
Answer: இ) ஒப்புரவு
3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை …………… என்றும் கூறுவர்.
அ) மருந்து
ஆ) மருத்துவர்
இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
Answer: அ) மருந்து
4. மருந்து உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ண தாசன்
Answer: ஆ) பாரதிதாசன்
5. எதிர்ச்சொற்களைப் பொருத்துக
Answer:
தொடர்களில் அமைத்து எழுதுக:
1. குறிக்கோள் -…………………………………
2. கடமைகள் -…………………………………
3. வாழ்நாள் -…………………………………
4. சிந்தித்து -…………………………………
Answer:
1. குறிக்கோள் – நான் மருத்துவர் ஆகவேண்டும் என்பது என் குறிக்கோள்.
2. கடமைகள் – பெற்றோரைப் பாதுகாப்பது இன்றியமையாத கடமைகளுள் ஒன்று.
3. வாழ்நாள் – வாழ்நாள் முழுவதும் உண்மையைப் பேசி உண்மைக்கு இலக்கணம் ஆனவர் அரிச்சந்திரன்.
4. சிந்தித்து – சிந்தித்துச் செயலாற்றினால் நாம் சிறப்படையலாம்.
குறுவினா:
1. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
Answer:
பொருளீட்டுவதைவிடப் பெரிய செயல் அதை முறையாக அனுபவிப்பதும், கொடுத்து மகிழ்வதும் ஆகும்.
2. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
Answer:
பொருளீட்டுவதன் நோக்கம் : மற்றவர்களுக்கு வழங்கி, மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை. இதுவே பொருளீட்டுவதன் நோக்கம் என குன்றக்குடி அடிகளார் கூறுகிறார்.
சிறுவினா:
1. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
Answer:
ஒப்புரவு :
- ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு , உணர்வு ஆகியவற்றின் அடிப்டையிலேயே மதிப்பிடப்படுகிறது. தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது.
- தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் உதவி செய்யலாம். இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான்.
- அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
2. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?
Answer:
(i) ஊருணியை அகழ்ந்து, தண்ணீரைக் கொணர்ந்து தேக்குபவர் மனிதர்தாம் ஊருணியை அமைத்துத் தண்ணீரைத் தேக்கும் கடமை பொறுப்புணர்வுடன் – கூட்டுப் பொறுப்புடன் செய்யப் பெற்றால் தான் ஊருணியில் தண்ணீர் நிறையும். பலரும் எடுத்துக் குடிக்கலாம். பயன்தரும் மரங்களை வளர்த்தால்தான் கனிகள் கிடைக்கும். தின்று அனுபவிக்கலாம்.
(ii) இங்கும் மனிதனின் படைப்பைத் தொடர்ந்துதான் நுகர்வு வருகிறது. ஒப்புரவு வருகிறது. அதேபோல மருந்து மரங்களையும் நட்டு வளர்த்தால் தான் பயன்படுத்த முடியும். ஆதலால் ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது உழைப்பு. கூட்டு உழைப்பு. பொருள்களைப் படைக்கும் கடமைகள் நிகழாத வரையில் ஒப்புரவு வாழ்வு மலராது. கடமைகள் இயற்றப்பெறாமல் ஒப்புரவு தோன்றாது.
(iii) ஒரேவழி தோன்றினாலும் நிலைத்து நில்லாது. கடமைகளில் பொருள் செய்தலில் ஒவ்வொருவரும் கூட்டு உழைப்பில் ஈடுபட்டால்தான் ஒப்புரவு நெறி தோன்றும்; வளரும்; நிலைத்து நிற்கும்.
சிந்தனை வினா:
1. ஒப்புரவுக்கும் உதவி செய்தலுக்கும் வேறுபாடு யாது?
Answer:
கற்பவை கற்றபின்:
1. பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகத்தினத் திரட்டி வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகள் :
(i) சகோதரி நிவேதிதா :
சகோதரி நிவேதிதா சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடர். இவர் அயர்லாந்தின் வடபகுதி மாகாணம் டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் சாமுவேல் ரிச்மண்ட் , மேரி இசபெல் ஹாமில்டன் ஆவர். இவருடைய இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.
தம்முடைய பதினெழு வயதில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். சிறந்த கல்வியாளராக உயர்ந்தார். ரஸ்கின் பள்ளி’ என்ற பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். தன் கடின உழைப்பால் பலரும் போற்றும்படி உயர்ந்தார்.
நியூயார்க்கில் ராமகிருஷ்ண தொண்டர் சங்கம் அமைப்பை நிறுவினார். சுவாமி விவேகானந்தரின் சீடரானார். எளிய, தூய, புனித வாழ்வு வாழ்வது, அனைத்து உயிர்களையும் இறைவனாகக் கருதி அவர்களுக்குப் பணி செய்வது ஆகிய விவேகானந்தரின் கொள்கையை ஏற்று செயல்பட்டார்.
சுவாமி விவேகானந்தரின் மறைவிற்குப் பின் பன்மடங்கு உறுதியுடன் இந்தியாவிற்குப் பணி செய்தார். இந்திய விடுதலைக்காகப் போராட முனைந்தார். அரவிந்தருடன் இணைந்தார். உணர்ச்சி பொங்க பேசுவார். உணர்ச்சி ததும்ப எழுதுவார். 1902 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். இந்தியாவின் ஒருமைப்பாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். பாரதியார் பெண்ணடிமை நீங்க வேண்டும் என்று கருதியதற்கு இவரும் காரணமாவார். தனது சொத்துகளையும் எழுதிய நூல்களையும் இந்தியப் பெண்களுக்கு தேசியக் கல்வி வழங்க எழுதி வைத்துவிட்டார். இவ்வாறு நிவேதிதா தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்காக உழைத்து உயர்ந்தவர். அதனால் பலராலும் போற்றப்படுகிறார். நாமும் இவரைப் போல இயன்ற வரை பிறருக்காக உழைக்கலாம்.
(ii) பண்டித ரமாபாய் :
பண்டித ரமாபாய் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். பெண்கள் கல்வி பெற முடியாத சூழ்நிலை நிலவிய அக்காலத்தில் இவருடைய தந்தை இவரைப் படிக்க வைத்தார்.
பெண்கள் படும் கொடுமைகளையும் துன்பங்களையும் நேரில் கண்டு மனம் வருந்தினார். பதினாறாம் வயதில் தந்தையை இழந்தார். அதன்பிறகு புராணக் கதைகளைப் பரப்பும் பொருட்டு இந்தியா முழுதும் பயணம் செய்தார். அப்போது ஏராளமான குழந்தை விதவைகளைக் கண்டார். குழந்தைத் திருமண முறையை ஒழிக்க வேண்டும் என எண்ணினார்.
பூனாவுக்குச் சென்றார். ஆரிய மகிளா சமாஜ்’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். பெண் கல்வி பரவவும், குழந்தைத் திருமணம் ஒழியவும், பாடுபட்டார். 1886 இல் அமெரிக்கா சென்றார். 1889இல் இந்தியா வந்தவர் மும்பையில் சாரதா சதன் என்ற அமைப்பை உருவாக்கினார். குஜராத்திலும் மத்திய பிரதேசத்திலும் பஞ்சம் நிலவியபோது 2000 பெண்களையும் குழந்தைகளையும் ஒரு பண்ணையில் தங்க வைத்துக் காப்பாற்றினார். முக்தி சதன், பிரீதி சதன், சாந்தி சதன் ஆகியன ரமாபாய் உருவாக்கிய பெண்களுக்கான தொண்டு நிறுவனங்கள் ஆகும். பிறருக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
தெரிந்து தெளிவோம்:
ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள்.215)
உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும். பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (குறள்.216)
நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பழமரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.
Other Important links for 7th std Tamil Book Answers:
Click Here to download the complete 7th Tamil Book Back Answers – Samacheer Kalvi 7th Tamil Book Back Answers