7th Tamil Term 3 Chapter 3.3 Book Back Solutions

7th Tamil Term 3 Chapter 3.3 – கண்ணியமிகு தலைவர் Book Back Questions with Answers:

Samacheer Kalvi 7th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 7 New Tamil Book Back Answers Term 3 Chapter 3.3 – கண்ணியமிகு தலைவர் Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 7th Std Tamil Book Portion consists of  21 Units. Check Unit-wise and Full Class 7th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 7th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 7th Standard Tamil Book Back Answers and 7th Tamil guide Book Back Answers PDF. See below for the New 7th Tamil Book Back Questions with Answer PDF:




7th Samacheer Kalvi Book – unit 3.3 கண்ணியமிகு தலைவர் Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 7th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

7th Tamil Samacheer Kalvi Book Back Answers

Term 3 Chapter 3.3 – கண்ணியமிகு தலைவர்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காயிதேமில்லத் ………. பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை
ஆ) எளிமை
இ) ஆடம்பரம்
ஈ) பெருமை
Answer: ஆ) எளிமை

2. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
அ) சுற்றுலா வழிகாட்டி
ஆ) சமுதாய வழிகாட்டி
இ) சிந்தனையாளர்
ஈ) சட்ட வல்லுநர்
Answer: ஆ) சமுதாய வழிகாட்டி

3. விடுதலைப்போராட்டத்தின்போது காயிதேமில்லத்………. இயக்கத்தில் கலந்துகொண்டார்.
அ) வெள்ளையனே வெளியேறு
ஆ) உப்புக் காய்ச்சும்
இ) சுதேசி
ஈ) ஒத்துழையாமை
Answer: ஈ) ஒத்துழையாமை

4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ………………
அ) சட்டமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) ஊராட்சி மன்றம்
ஈ) நகர் மன்றம்
Answer: ஆ) நாடாளுமன்றம்

5. எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) எதிர் + ரொலித்தது
ஆ) எதில் + ஒலித்தது
இ) எதிர் + ஒலித்தது
ஈ) எதி + ரொலித்தது
Answer: இ) எதிர் + ஒலித்தது

6. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) முதுமொழி
ஆ) முதுமைமொழி
இ) முதியமொழி
ஈ) முதல்மொழி
Answer: அ) முதுமொழி

குறுவினா:

1. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
Answer:
விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு :
விடுதலைப் போராட்டத்தின் போது காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அவருடைய வேண்டுகோள் காயிதே மில்லத் அவர்களின் மனதில் தீராத விடுதலை வேட்கையை ஏற்படுத்தியது. தமது கல்வியைவிட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

2. காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.
Answer:
காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் கடைப்பிடித்த எளிமை :
மில்லத் அவர்கள் தம் ஒரே மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். அவரது இல்லத்திருமணம் ஆடம்பரமாக நிகழும் என எல்லாரும் எண்ணியிருந்தனர். ஆனால் அவர் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாகத் தம் மகனின் திருமணத்தை நடத்தினார். பெண் வீட்டாரிடம் மணக்கொடையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவினா:

1. ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
Answer:
ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத் அவர்களின் கருத்து :

(i) இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

(ii) மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று சிலரும் பழமை வாய்ந்த மொழியை ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிலரும் பரிந்துரை செய்தனர்.

(iii) ஆனால் காயிதே மில்லத் அவர்கள் பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றால், முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள் திராவிட மொழிகளில் மிகவும் இலக்கியச் செறிவுகொண்ட தமிழ் மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.




சிந்தனை வினா:

1. நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?
Answer:
மக்கள் நலப் பணிகள் :
மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் ஆகியனவாகும். இவற்றில் முதலிரண்டு இடத்தில் உள்ளவை உணவும் உடையும். இவை வேளாண்மையை ஆணி வேராகக் கொண்டவை. அத்தகு வேளாண்மை சிறப்பாக அமைய நீர்நிலைகளை வளப்படுத்துவேன். கோடைக்காலங்களில் தூர் எடுத்து மழைநீரைச் சேமிக்க வழிவகை செய்வேன். அனைத்து இல்லங்களிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைக்க உத்தரவிடுவேன்.

கல்வி இல்லா குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன். போக்குவரத்து வசதிக்காக சாலைகளைச் சீரமைத்து மக்கள் அவதிப்படாமல் இருக்க உதவுவேன்.

மக்கள் தொகைக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை அமைத்துத் தருவேன். கல்வியைப் பெற்றுவிட்டால் மாநிலத்தை அவர்களே செம்மைப்படுத்தி விடுவார்கள். இவையே நான் செய்யும் மக்கள் நலப்பணிகள் ஆகும்.

கற்பவை கற்றபின்:

1. எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த பிற தலைவர்கள் குறித்து வகுப்பறையில் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்! எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள் என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

கக்கன் :
இவர் சுதந்திர போராட்டத் தியாகி. எளிமையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் தமிழக முதல்வரர்களாக இருந்தபோது, அவர்களது அமைச்சரவையில் பத்து ஆண்டுகளும், லோக்சபா உறுப்பினராக ஐந்தாண்டுகளும் பதவி றாலும், குடியிருக்க சொந்தமாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அரசு பேருந்தில் பயணம் செய்வார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்.

காமராஜர் :
தன்னலம் இல்லா உழைப்பு, எளிமை, நேர்மை இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரர் காமராசர். இவருடைய குடும்பம் வறுமையில் வாடியதால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனாலும் பல மேதைகளின் அறிவைப் பெற்றவர். மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதும் எளிமையாகவே வாழ்ந்தவர். தன் பதவியைப் பயன்படுத்தி நேர்மைக்குப் புறம்பான எச்செயலையும் செய்யாதவர். தம் உறவினர்களுக்கு அரசுப் பணிகளுக்கோ கல்லூரிப் படிப்பிற்கோ பரிந்துரை செய்யாதவர்.

இவர்களின் எளிமையான வாழ்வைப் படித்து நாமும் எளிமையாக வாழ்வோம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

தெரிந்து தெளிவோம்:

(i) தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார். – அறிஞர் அண்ணா
(ii) இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர். – தந்தை பெரியார்

Other Important links for 7th std Tamil Book Answers:

Click Here to download the complete 7th Tamil Book Back Answers – Samacheer Kalvi 7th Tamil Book Back Answers