Samacheer Kalvi 8th Social Civics Chapter 1 Answers Solutions in Tamil:
Samacheer Kalvi 8th Standard New Social Science in Tamil Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. 8th standard new Syllabus 2022 to 2023 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. Samacheer Kalvi Class 8 Social Civics Book Chapter 1 – மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Answers/Solutions in English are provided on this page. 8th Std New Social History Book consists of 08 units, Geography Book consists of 08 units, Civics book portion consists of 07 units, Economics book portion consists of 02 units, All Social Science Book Back One, and Two Mark Answers/Solutions Guide in Tamil Medium are given below.
Check Unit wise and Samacheer Kalvi 8th Social Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Samacheer Kalvi Class 8th Std Social Book Back Answers PDF. Check Social Science – History, Geography, Civics, Economics Answers below. See below for the 8th New Syllabus Book Back Solution guide free PDF download:
Samacheer Kalvi 8th Social Science Book Back Solutions Guide Tamil Medium:
Samacheer Kalvi 8th std Social Geography Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and Solutions/Answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 8th Social Science Civics Chapter 1 – மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? in Tamil is given below.
8th Civics (குடிமையியல்) Book Back Solution Tamil
அலகு 1 – மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) துணைக் குடியரசுத் தலைவர்
இ) பிரதம மந்திரி
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்
2. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) சபாநாயகர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
ஆ) முதலமைச்சர்
3. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
அ) உள்துறை அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) சபாநாயகர்
ஈ) ஆளுநர்
விடை:
ஈ) ஆளுநர்
4. உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்
5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
அ) 62
ஆ) 64
இ) 65
ஈ) 58
விடை:
ஆ) 62
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ____________ ஆகும்.
விடை:
29
2. ஆளுநரின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.
விடை:
5
3. மாவட்ட நீதிபதிகள் ____________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
விடை:
ஆளுநர்
4. ஆளுநர் ஒரு மாநிலத்தின் ____________ ஆவார்.
விடை:
நிர்வாகத் தலைவர்
5. ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக ____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
விடை:
25 வயது
III. பொருத்துக
1. ஆளுநர் | கீழவை |
2. முதலமைச்சர் | பெயரளவுத் தலைவர் |
3. சட்டமன்ற பேரவை | மேலவை |
4. சட்டமன்ற மேலவை | உண்மையான தலைவர் |
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ |
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
1. முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
விடை:
சரி
2. ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.
விடை:
தவறு
3. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை .
விடை:
சரி
V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்
i) குடியரசுத் தலைவர்
ii) துணை குடியரசுத் தலைவர்
iii) ராஜ்ய சபை உறுப்பினர்கள்
iv) சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
அ) i, ii & iii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) i, ii, iii மற்றும் iv சரி
விடை:
இ) i, iii மற்றும் iv சரி
VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி
1. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக
விடை:
இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்
சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை முதலியன இரு அவைகளாகும்.
2. மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?
விடை:
சட்டமன்ற பேரவை உறுப்பினராக ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.
3. முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:
ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
இவர் பதவியேற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
4. மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
விடை:
முதலமைச்சர், அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.
முதல்வர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. இதுவே அமைச்சரவை குழுவாகும்.
VII. விரிவான விடையளி
1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
மாநிலத்தின் தலைமை நிர்வாகி முதலமைச்சர் ஆவார். மாநில அரசின் பல முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
அமைச்சரவையை உருவாக்குவதில் ‘முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுனர் நியமிக்கிறார்.
பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
முதலமைச்சர் மாநில அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார்.
மாநில அரசின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியானது ஆகும்.
இவர் மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுனர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.
2. மாநில சட்ட மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும்.
சட்டமன்றம் மாநிலப்பட்டியல் மற்றும் மத்தியப்பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.
மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.
மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.
மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுபடுத்துகிறது. நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.
சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசு வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கிக் கொள்ளவோ இயலாது.
சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கு கொள்கின்றனர்.
குறிப்பாக அரசியலமைப்பைத் திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது.
3. உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?
விடை:
உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் பல வித நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்கின்றன.
குறிப்பாக ஆட்கொணர்வு, தகுதி முறை வினவும், தடை உறுத்தும், கட்டளையிடும் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.
ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.
இது மாநிலத்திலுள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.
குறிப்பாக அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூலமே உறுதி செய்யப்படுகிறது.
Other Important Links for 8th Social Science Book Answers Tamil:
Click Here to download Samacheer Kalvi’s 8th Social Science Book Back Answers Tamil – 8th Social Book Answers Tamil