Samacheer Kalvi 8th Tamil Book Back Answers 2.5 Book Back Questions with Answers:
Samacheer Kalvi 8th Std Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 8th Standard New Tamil Syllabus 2022 – 2.5 வினைமுற்று Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 8th Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 8th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 8th Tamil Book back Solutions/Answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 8th Tamil Book Back Questions with Answer PDF:
Samacheer Kalvi 8th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
8th Tamil Book Back Answers
Chapter 2.5 – வினைமுற்று
1. ‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
எ.கா: அவன் வாழ்க. (ஆண்பால்) நாம் வாழ்க. (தன்மை )
Answer:
பால்கள்
- அவள் வாழ்க (பெண்பால்)
- அவர்கள் வாழ்க (பலர்பால்)
- அது வாழ்க (ஒன்றன் பால்)
- அவைகள் வாழ்க (பலவின்பால்)
இடங்கள்
- நீ வாழ்க (முன்னிலை)
- அவர்கள் வாழ்க (படர்க்கை)
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது – இத்தொடரிலுள்ள வினைமுற்று …………………….
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்தது
Answer: ஈ) மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………………..
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
Answer: அ) படித்தான்
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ……………….
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
Answer: ஆ) ஓடு
சிறுவினா
1. வினைமுற்று என்றால் என்ன?
Answer:
ஒரு வினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.
2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
Answer:
தெரிநிலை வினைமுற்று செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.
3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
Answer:
க, இய, இயர், அல் என்பன வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ஆகும்.
4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
Answer:
மொழியை ஆள்வோம்
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
இயற்கையைப் பாதுகாப்போம்.
(i) வணக்கம்.
(ii) உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடு அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
(iii) அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலை உருவாகியுள்ளது.
(iv) மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம், வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்து விட்டன. சீக்கிரமே, வாழ முடியாத இடமாகப் பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது.
(v) உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணுயிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண்வளம், மேகங்கள், ஏன் ஒவ்வொரு மழைத்துளியும் கூட இயற்கையின் கொடைதான். இதில் ஒன்றை இழந்து கூட மனிதர்கள் வாழவே முடியாது.
(vi) உங்கள் தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதைப்போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்து வையுங்கள்.
(vii) இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28ம் நாள் உலக இயற்கை வளப்பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
(viii) இந்த நாளில், இயற்கையைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்வோம். அதுவே, அந்த நாளுக்கான நமது மரியாதை என்று சொல்லலாம்.
(ix) என்ன செய்யப்போகிறோம் என்பதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.
சொல்லக்கேட்டு எழுதுக.
இயற்கையை விரும்புவது மட்டுமன்றி, அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்று பொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டுகளித்த இயற்கைச் செல்வங்களை, வரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்கவேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ் எண்கள் அறிவோம்.
விடுபட்ட கட்டங்களை நிரப்புக.
வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.
1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2.
2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16.
3. உலக இயற்கை நாள் அக்டோபர்
4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6.
5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர் 5.
Answer:
1. உ
2. கச
3. ங
4. க
5. ரு
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
2. கடமையைச் செய்.
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?
Answer:
1. செய்தித்தொடர்
2. விழைவுத்தொடர்
3. உணர்ச்சித் தொடர்
4. வினாத்தொடர்
தொடர்களை மாற்றுக.
எ.கா: நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத் தொடராக மாற்றுக)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக)
Answer:
என்னே , காட்டின் அழகு!
2. ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித் தொடராக மாற்றுக)
Answer:
பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.
3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக)
Answer:
அதிகாலையில் துயில் எழு.
4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக)
Answer:
முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.
5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத் தொடராக மாற்றுக)
Answer:
காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?
கடிதம் எழுதுக
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
30, சாந்திநகர்,
திருப்பூர் – 2.
நாள்: 01.07.2020.
இனிய நண்பா ,
வணக்கம். நலம். நலம் அறிய ஆவலாய் உள்ளேன்.
இவ்வாண்டு உன் பள்ளியின் 50ஆம் ஆண்டு விளையாட்டு விழா 25.06.2020 அன்று நடைபெற்றதாய் மடல் எழுதியிருக்கின்றாய். இளைஞர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் நீயும் கலந்து கொண்டதாகவும், முதலிடம் பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளாய். வெற்றி பெற்ற செய்தி அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
என் அன்பு நிறைந்த பாராட்டினை உனக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். உன்னை நண்பனாய் அடைந்தமையை எண்ணிப் பெருமைப்படுகின்றேன்.
படிப்பில் நீ காட்டி வருகின்ற ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாய் வர உதவுகின்றன. அதேபோல் விளையாட்டிலும் வெற்றி பெற்றுள்ளமை நீ படிப்பு, விளையாட்டு ஆகிய இரண்டிலும் கெட்டிக்காரன் என்பதைப் பறைசாற்றுகின்றன. மாநில, தேசியப் போட்டிகளிலும் தடகளத்தில் முத்திரை பதித்து பெருமை சேர்த்திடவும் வாழ்த்துகிறேன்.
உன் அன்பிற்குரிய நண்பன்,
அ. ராசா.
உறைமேல் முகவரி:
பெறுநர்
செல்வன். ந. கண்ண ன்,
16, பாரதியார் தெரு,
காந்தி நகர்,
மதுரை – 16.
மொழியோடு விளையாடு
உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.
1. நடக்கிறது – நட
2. போனான் – போ
3. சென்றனர் – செல்
4. உறங்கினாள் – உறங்கு
5. வாழிய – வாழ்
6. பேசினாள் – பேசு
7. வருக – வா
8. தருகின்றனர் – தா
9. பயின்றாள் – பயில்
10. கேட்டார் – கேள்
நிற்க அதற்குத் தக.
என் பொறுப்புகள்:
1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
கலைச்சொல் அறிவோம்
1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicker
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud
இணையத்தில் காண்க
1. பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளை இணையத்தில் கண்டு அறிக.
Answer:
பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக) ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள்.
இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனிமனித வாழ்க்கையிலும் உறவு முறைகளிலும், சமூகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். பல பழங்குடியின மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழ்கிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாபோன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.