8th Tamil Unit 8.6 Book Back Questions with Answers

Samacheer Kalvi 8th Tamil Book Back Answers 8.6 Book Back Questions with Answers:

Samacheer Kalvi 8th Std  Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 8th Standard New Tamil Syllabus 2022 – 8.6 திருக்குறள் Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 8th Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 8th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 8th Tamil Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 8th Tamil Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 8th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

8th Tamil Book Back Answers

Chapter 8.6 – திருக்குறள்

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆண்மையின் கூர்மை ……………..
அ) வறியவருக்கு உதவுதல்
ஆ) பகைவருக்கு உதவுதல்
இ) நண்பனுக்கு உதவுதல்
ஈ) உறவினருக்கு உதவுதல்
Answer: ஆ) பகைவருக்கு உதவுதல்

2. வறுமை வந்த காலத்தில் …………….. குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்ப ம்
ஆ) தூக்கம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
Answer: இ) ஊக்கம்

3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பெரிய + செல்வம்
ஆ) பெருஞ் + செல்வம்
இ) பெரு + செல்வம்
ஈ) பெருமை + செல்வம்
Answer: ஈ) பெருமை + செல்வம்

4. ‘ஊராண்மை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) ஊர் + ஆண்மை
ஆ) ஊராண் + மை
இ) ஊ + ஆண்மை
ஈ) ஊரு + ஆண்மை
Answer: அ) ஊர் + ஆண்மை

5. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) திரிந்தது அற்று
ஆ) திரிந்தற்று
இ) திரிந்துற்று
ஈ) திரிவுற்று
Answer: ஆ) திரிந்தற்ற

பொருத்துக

1. இன்பம் தருவது – நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
2. நட்பு என்பது – குன்றிமணியளவு தவறு
3. பெருமையை அழிப்பது – செல்வம் மிகுந்த காலம்
4. பணிவு கொள்ளும் காலம் – சிரித்து மகிழ மட்டுமன்று
5. பயனின்றி அழிவது – பண்புடையவர் நட்பு
Answer:
1. இன்பம் தருவது – பண்புடையவர் நட்பு
2. நட்பு என்பது – சிரித்து மகிழ மட்டுமன்று
3. பெருமையை அழிப்பது – குன்றிமணியளவு தவறு
4. பணிவு கொள்ளும் காலம் – செல்வம் மிகுந்த காலம்
5. பயனின்றி அழிவது – நற்பண்பில்லாதவன் வெற்ற பெருஞ்செல்வம்




குறுவினா

1. எது பெருமையைத் தரும்?
Answer:
காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.

2. நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது?
Answer:
நமக்கு வரும் துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?
Answer:
இவ்வுலகம் பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இயங்குகிறது.

4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Answer:
நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியதன்று. நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

8th Tamil Book Back Solutions
Answer:
கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

படைச்செருக்கு

1. கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
தெளிவுரை : காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்).
அணி : பிறிதுமொழிதல் அணி

2. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு.
தெளிவுரை : பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

நட்பு
3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
தெளிவுரை : நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
அணி : உவமை அணி

4. நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
தெளிவுரை : நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று; நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

நட்பு ஆராய்தல்

5. ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
தெளிவுரை : மீண்டும், மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவனுடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.

6. கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
தெளிவுரை : நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

மானம்

7. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
தெளிவுரை : செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்து கொள்ளவேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.

8. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
தெளிவுரை : மலையளவு பெருமை உடையவராக இருந்தாலும் குன்றிமணியளவு தவறு செய்தால் அவரது பெருமை அழிந்து விடும்.

9. பண்புடைமை பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
தெளிவுரை : பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது; இல்லாவிட்டால் மண்ணுக்குள் புதைந்து அழிந்திருக்கும்.

10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமை யால்திரிந்து அற்று.
தெளிவுரை : தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி
அழியும். : உவமையணி.

நூல் வெளி

பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
8th Tamil Book Back Solution
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.