9th Science Book Back Unit 12 in Tamil

9th Science – Chemistry – Unit 12 Book Back Questions with Answers in Tamil:

Samacheer Kalvi 9th Std Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Science uploaded and available below. 9th Standard New Science Syllabus 2022 – வேதியியல் 12 – தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை Science Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 9th Science Book Portion consists of  25 Units. Science Book Contain Physics 09 units, Chemistry 07 units, Biology 08 units  and Computer Science 01 units in Tamil. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 9th Science Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Science Book Back Answers and 9th Science Solution guide Book Back Answers PDF. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 9th Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Science Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

அலகு 12: தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை Book Back Answers in Tamil

வேதியியல் – அலகு 12

தனிமங்களின் வகைப்பாட் டு அட்டவணை

1. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது? அ) நவீன தனிம அட்டவணை

ஆ) ஹுண்ட்ஸ் விதி
இ) எண்ம விதி
ஈ) பௌலீயின் விலக்கல் கோட்பாடு
விடை: இ) எண்ம விதி

2. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது?
அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஒத்த தன்மை
ஈ) முரண்பாடு
விடை: அ) அணு எண்

3. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள்_ தொகுதி வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளன?
அ) 7,18
ஆ) 18,7
இ) 17,8
ஈ) 8, 17
விடை : ஆ) 18,7

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் _________ஆகும்.
விடை: சராசரி

2. அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் _____________ தொகுதியில் காணப்படும்.
விடை: 18வது

3. தனிமங்களை அட்டவணைப்படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை ___________ ஆகும்.
விடை: அணு நிறை

4. திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ________________.
விடை: பாதரசம்

III. பொருத்துக:

விடை:

9th Science Book Back Answers




IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக:

1. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.
விடை: சரி

2. உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.
விடை: தவறு உலோகங்கள் எலக்ட்ரான்களை இழக்கும்.

3. உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை.
விடை: சரி

4. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.
விடை: சரி

5. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.
விடை: சரி

V. கீழ்கண்ட கூற்றைச் சரி பார்க்க:

1. கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.

காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.

அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.
விடை: அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி:

1. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
விடை:
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும்.

2. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?
விடை:
தொகுதிகள்: தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள அமைப்பு “தொகுதிகள்” ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.

வரிசைகள்: தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு “வரிசைகள்” ஆகும். மொத்தம் 7 வரிசைகள் உள்ளன.

3. மெண்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
விடை:
பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

எ.கா. கடின உலோகங்கள்:

  • இரும்பு (Cu), வெள்ளி (Ag)

மென் உலோகங்கள்:

  • சோடியம் (Na), பொட்டாசியம் (K)
  • H-க்கு என்று ஒரு தனி இடம் இல்லை, அலோகமாகிய ஹைட்ரஜன் Li, Na & K போன்ற மென் உலோகங்களோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டது.
  • கூடிக்கொண்டே செல்லும் அணுநிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடியவில்லை. எ.கா. (Co & Ni, Te & I)
  • தனிம வரிசை அட்டவணையில் ஓரகத் தனிமங்களுக்கு (ஐசோடோப்புகள்) இடம் கொடுக்கப்படவில்லை

4. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. எல்லா தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணிற்கு ஏற்றார் போல் உள்ளன.
  2. தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடை மட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு “வரிசைகள்” ஆகும். மொத்தம் 7 வரிசைகள் உண்டு.
  3. தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள கூடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்படும்.
  4. தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்தி “தொகுதிகள்” ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.
  5. மூன்றாம் தொகுதியில் வரும் லாந்தனைடுகளும் ஆக்டினைடுகளும் “உள் இடைநிலைத் தனிமங்கள்” ஆகும்.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil