9th Science – Biology – Unit 22 Book Back Questions with Answers in Tamil:
Samacheer Kalvi 9th Std Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Science uploaded and available below. 9th Standard New Science Syllabus 2022 – உயிரியல் 22 – நுண்ணுயிரிகளின் உலகம் Science Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 9th Science Book Portion consists of 25 Units. Science Book Contain Physics 09 units, Chemistry 07 units, Biology 08 units and Computer Science 01 units in Tamil. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 9th Science Book back Solutions/Answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Science Book Back Answers and 9th Science Solution guide Book Back Answers PDF. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:
Samacheer Kalvi 9th Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Science Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
அலகு 22: நுண்ணுயிரிகளின் உலகம் Book Back Answers in Tamil
உயிரியல் – அலகு 22
நுண்ணுயிரிகளின் உலகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது
அ) காசநோய்
ஆ) மூளைக்காய்ச்சல்
இ) டைபாய்டு
ஈ) காலரா
விடை:
அ) காசநோய்
2. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
அ) தும்மல்
ஆ) இருமல்
இ) கடத்திகள்
ஈ) துளிர்தொற்று முறை
விடை:
இ) கடத்திகள்
3. டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
அ) நுரையீரல்
ஆ) தொண்டை
இ) இரத்தம்
ஈ) கல்லீரல்
விடை:
ஆ) தொண்டை
4. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
அ) எலும்பு மஜ்ஜை
ஆ) குடல்
இ) மண்ணீ ரல்
ஈ) நுரையீரல்
விடை:
ஈ) நுரையீரல்
5. மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____ தர்க்கும்.
அ) குடலினை
ஆ) நுரையீரலினை
இ) கல்லீரலினை
ஈ) நிணநீர் முனைகளை
விடை:
ஆ) நுரையீரலினை
6. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
அ) கல்லீரல்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
அ) கல்லீரல்
7. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
அ) தோல்
ஆ) வாய் மற்றும் மூக்கு
இ) காதுகள்
ஈ) கண்
விடை:
ஆ) வாய் மற்றும் மூக்கு
II. கோடிட்ட இடத்தை நிரப்பு
1. ______ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
விடை:
கெட்டழிக்கும் பாக்டீரியங்கள்
2. டைபாய்டு காய்ச்சல் _____ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
விடை:
சால்மோனெல்லாடைஃபி
3. எச்1 என்1 வைரஸ் _____ ஐ உருவாக்குகிறது.
விடை:
பன்றிக்காய்ச்சல்
4. டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது
விடை:
ஏடிஸ் எய்ஜிப்டி கொசு
5. ______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
விடை:
பிசிஜி
6. காலரா ____ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா ____ ஆல் ஏற்படுகிறது.
விடை:
விப்ரியோ காலரா, பிளாஸ்மோடியம்
III. விரிவுபடுத்தி எழுதுக
1. ORS
விடை:
ORS – Oral Re hydration Source
2. WHO
விடை:
WHO – World Health Organization
3. HIV
விடை:
HIV – Human Immuno Deficiency Virus
4. BCG
விடை:
BCG – Bacillus Calmelte Guerin
5. DPT
விடை:
DPT – Dipetheria, Pertussis and Tetanus
IV. கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு.
1. எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி
விடை:
பி.சி.ஜி
2. பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா
விடை:
காலரா
V. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
1. ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.
விடை: – சரி
2. தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
விடை: – தவறு
தொற்று வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
3. 1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
விடை: – சரி
4. ஹெப்பாடைட்டிஸ் பி, ஹெப்பாடைட்டிஸ் ஏ-வைக் காட்டிலும் அபாயகரமானது.
விடை: – சரி
VI. பொருத்துக.
விடை: – 1 – iv; 2 – i; 3 – ii; 4 – iii
VII. கீழ்க்காண்பவனவற்றை வரையறு.
1. நோய்க்கிருமி
விடை:
உயிருள்ள ஒரு நுண்ணுயிரி பிற உயிரினங்களுக்கு நோயை உண்டாக்குதல். எ.கா. பாக்டீரியா வைரஸ்
2. பாக்டீரியோஃபேஜ்கள்
விடை:
பாக்டீரியாவைத் தாக்கி தீங்கு பயக்கும் வைரஸ்.
3. பிரியான்கள்
விடை:
- நோயை உண்டாக்கும் புரதத்துகள்.
- புரதத்தை மட்டுமே கொண்ட வைரஸ்.
4. நோய் எதிர்ப்பு தடுப்பூசி
விடை:
இவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ (அ) அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் (அ) சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்.
VIII. சுருக்கமாக விடையளி
1. விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.
விடை:
2. மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
விடை:
- நோய் கடத்தி – பெண் அனபிலிஸ் கொசுக்கள்
- பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் சாவுக்கான மலேரியா ஒட்டுண்ணி.
3. மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்த வகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:
முத்தடுப்பூசி : மூன்று விதமான பாக்டீரிய நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (DPT)
தடுக்கப்படும் நோய்கள் :
- தொண்டை அடைப்பான்,
- கக்குவான் இருமல்,
- டெட்டானஸ்
4. சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.
விடை:
காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி
5. வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
விடை:
ரோட்டா வைரஸ்
தடுக்கும் முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துதல். தூய்மையாக உணவை உண்ணுதல்.
6. இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
விடை:
Other Important links for 9th Science Book Back Answers in Tamil:
Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil