Samacheer Kalvi 9th Social Civics Chapter 3 Answers Solutions in Tamil:
Samacheer Kalvi 9th Standard New Social Science in Tamil Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. 9th standard new Syllabus 2022 to 2023 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. Samacheer Kalvi Class 9 Social Civics Book Chapter 3 மனித உரிமைகள் Answers/Solutions in English are provided on this page. 9th Std New Social History Book consists of 11 units, Geography Book consists of 8 units, Civics book portion consists of 6 units, Economics book portion consists of 5 units, All Social Science Book Back One, and Two Mark Answers/Solutions Guide in Tamil Medium are given below.
Check Unit wise and Samacheer Kalvi 9th Social Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Samacheer Kalvi Class 9th Std Social Book Back Answers PDF. Check Social Science – History, Geography, Civics, Economics Answers below. See below for the 9th New Syllabus Book Back Solution guide free PDF download:
Samacheer Kalvi 9th Social Science Book Back Solutions Guide Tamil Medium:
Samacheer Kalvi 9th std Social History Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and Solutions/Answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 9th Social Science Civics Chapter 3 – மனித உரிமைகள் in Tamil is given below.
9th Civics (குடிமையியல்) Book Back Solution Tamil
அலகு 3 – மனித உரிமைகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு
அ) தென் சூடான்
ஆ) தென் ஆப்பிரிக்கா
இ நைஜீரியா
ஈ) எகிப்த்
விடை:
ஆ) தென் ஆப்பிரிக்கா
2. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _____ உரிமைகள்
அ) சமூகம்
ஆ) பொருளாதாரம்
இ) அரசியல்
ஈ) பண்பாட்டு
விடை:
இ) அரசியல்
3. ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் – எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுதந்திர உரிமை
இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
ஈ) சமய சுதந்திர உரிமை
விடை:
இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _____
அ) 20 நாட்கள்
ஆ) 25 நாட்கள்
இ) 30 நாட்கள்
ஈ) 35 நாட்கள்
விடை:
இ) 30 நாட்கள்
5. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.
ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.
iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.
அ) 1 மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii மற்றும் iii சரி
ஈ) i, ii மற்றும் iv சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iv சரி
6. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ) (A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) க்கு சரியான விளக்கம்.
7. ஐ.நா. சபையின் படி ____ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
ஈ) 18
8. ___ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
அ) இலக்கியம்
ஆ) அமைதி
இ) இயற்பியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
ஆ) அமைதி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் _____ பிரிவுகளைக் கொண்டுள்ளது.
விடை:
30
2. அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ____ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.
விடை:
1976 ஆம் ஆண்டு 42 வது
3. தேசிய மனித உரிமை ஆணையம் _____ ஆண்டு அமைக்கப்பட்டது.
விடை:
அக்டோபர் 12, 1993
4. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் ____
விடை:
தமிழ்நாடு
III. பொருத்துக
IV. சுருக்கமாக விடையளி
1. மனித உரிமை என்றால் என்ன?
விடை:
“இன், பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே” மனித உரிமை ஆகும்.
2. அடிப்படை உரிமைகள் யாவை?
விடை:
அடிப்படை உரிமைகள்.
- சமத்துவ உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை
- சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
- சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.
- அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை
3. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளவை யாவை?
விடை:
குழந்தைகளுக்கான உரிமைகள் :
- வாழ்வதற்கான உரிமை.
- குடும்பச் சூழலுக்கான உரிமை
- கல்விக்கான உரிமை
- சமூக பாதுகாப்பு உரிமை
- பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
- விற்பது மற்றும் கடத்தலுக்கு எதிரான உரிமை
- குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற
சுரண்டல்களுக்கு எதிரான உரிமை.
4. அரசியலமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
- ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற தீர்வழிகளுக்கான உரிமைகளின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
- நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது இது நீதிப் பேராணை என்று அழைக்கப் படுகிறது.
- ஒரு செயல் அரசமைப்புச் சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.
5. போக்சா (POCSO) – வரையறு.
விடை:
- போக்சா சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகும்.
சிறப்பு அம்சங்கள் : - இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
- பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்க்குத் தகுந்த தண்டனை வழங்குகிறது.
- குழந்தையின் வாக்குமூலம் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.
6. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
விடை:
குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் தேவை. ஏனெனில்
குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.
7. தொழிலாளர் நலனுக்காக பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?
விடை:
பெண் தொழிலாளர்கள் நலனுக்காக டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் பங்களிப்பு :
- சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்
- பெண் தொழிலாளர் நலநிதி
- பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
- பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.
8. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.
விடை:
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆயினும் வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.
- பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படுவதனால் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வை இழந்து விடுகின்றனர்.
- எனவே பெண்களுக்கான தனிச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
9. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.
விடை:
- தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
- தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
- தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (E.S.I.)
- தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம்.
V. விரிவான விடையளி
1. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
விடை:
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR) : –
- வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்து கொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
- 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்ட பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.
- மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் :-
- ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகளே சமூக உரிமைகள்
- ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை பொருளாதார உரிமைகள். ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன இதனால் பாதுகாக்கப்படுகின்றன.
- ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள்.
குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் :-
- அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவையே இவ்வுரிமைகள்.
- ஒருவர் சமூகத்தின் குடிமை மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.
2. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?
விடை:
அடிப்படைக் கடமைகள் :
- அடிப்படை கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன.
- 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
- 1976ம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அரசமைப்பு 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.
செயல்படுத்தும் விதம் :
- சின்னங்களை மதித்தல்
- இயக்கங்களில் இணைதல், செயல்படுதல்
- சூழல், பொருட்கள் பாதுகாத்தல்
- அனைவரும் கற்க வழி செய்தல்
- ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு செயல்படுத்த முடியும்.
3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
தேசிய மனித உரிமைகள் ஆணையம் :- (இந்திய மனித உரிமைகள் ஆணையம்)
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒரு இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் :-
- மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.
- மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
- மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
- சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
- மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
4. தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?
விடை:
தொழிலாளர் உரிமைகள் :
சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருபாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.
தொழிலாளர்களுக்கான சட்டங்கள் :-
- தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
- தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
- இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
- தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI).
- தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
- நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.
5. அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
விடை:
அடிப்படை உரிமைகளை கீழ்க்கண்டவாறு என்(நம்) வாழ்க்கையில் அனுபவிக்கின்றேன்
(அனுபவிக்கின்றோம்)
ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகும்.
அடிப்படை உரிமைகள் :-
- சமத்துவ உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை
- சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
- சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
- அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை
சமத்துவ உரிமை :-
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும்.
சுதந்திர உரிமை :-
சுதந்திரமாகப் பேச, ஆயுதமின்றிக் கூட, சங்கங்கள் அமைக்க, இந்தியாவில் எந்த பகுதியிலும் வகிக்க, இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாட, எந்த தொழிலையும் வணிகத்தையும் செய்ய உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சுரண்டலுக்கெதிரான உரிமை :
14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள், அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை :-
குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது.
பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் :-
அரசமைப்பு சட்டம் கல்விக்கூடங்களை அமைக்கவும். நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.
அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை :-
ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது.
Other Important links for 9th Social Science Book Back Solutions Guide:
Click Here to Download Samacheer Kalvi 9th Social Science Book Back Answers –9th Social Science Book Back Answers in Tamil