Samacheer Kalvi 9th Social Geography Chapter 5 Answers Solutions in Tamil:
Samacheer Kalvi 9th Standard New Social Science in Tamil Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. 9th standard new Syllabus 2022 to 2023 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. Samacheer Kalvi Class 9 Social Geography Book Chapter 5 உயிர்க்கோளம் Answers/Solutions in English are provided on this page. 9th Std New Social History Book consists of 11 units, Geography Book consists of 8 units, Civics book portion consists of 6 units, Economics book portion consists of 5 units, All Social Science Book Back One, and Two Mark Answers/Solutions Guide in Tamil Medium are given below.
Check Unit wise and Samacheer Kalvi 9th Social Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Samacheer Kalvi Class 9th Std Social Book Back Answers PDF. Check Social Science – History, Geography, Civics, Economics Answers below. See below for the 9th New Syllabus Book Back Solution guide free PDF download:
Samacheer Kalvi 9th Social Science Book Back Solutions Guide Tamil Medium:
Samacheer Kalvi 9th std Social History Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and Solutions/Answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 9th Social Science Geography Chapter 5 – உயிர்க்கோளம் in Tamil is given below.
9th Geography (புவியியல்) Book Back Solution Tamil
அலகு 5 – உயிர்க்கோளம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி ______
அ) தூந்திரா
ஆ) டைகா
இ) பாலைவனம்
ஈ) பெருங்கடல்கள்
விடை: அ) தூந்திரா
2. உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.
அ) சூழ்நிலை மண்டலம்
ஆ) பல்லுயிர்த் தொகுதி
இ) சுற்றுச்சூழல்
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை: அ) சூழ்நிலை மண்டலம்
3. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.
அ) உற்பத்தியாளர்கள்
ஆ) சிதைப்போர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) இவர்களில் யாரும் இல்லை
விடை: ஆ) சிதைப்போர்கள்
4. பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்.
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
ஆ) குறைந்த அளவு ஈரப்பசை
இ) குளிர் வெப்பநிலை
ஈ) ஈரப்பதம்
விடை: அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
5. மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்.
அ) மிக அதிகப்படியான ஈரப்பதம்
ஆ) மிக அதிகமான வெப்பநிலை
இ) மிக மெல்லிய மண்ணடுக்கு
ஈ) வளமற்ற மண்
விடை: ஈ) வளமற்ற மண்
II. கூற்று (A) காரணம் (R)கண்டறிக:
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி, காரணம் தவறு
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
1. கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது.
காரணம் : ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
2. கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ____ எனப்படும்.
விடை: சூழ்நிலை மண்டலம்
2. பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை _____
விடை: நுகர்வோர்கள்
3. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _____ என அழைக்கின்றோம்.
விடை: உணவு வலை
4. மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை _____ என்கிறோம்.
விடை: பல்லுயிர்த்தொகுதி
5. பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் _____ எனப்படும்
விடை: பாலைவனத்தாவரங்கள்
6. ____ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
விடை: கடல்
IV. சுருக்கமான விடையளி:
1. உயிர்க்கோளம் என்றால் என்ன?
விடை:
- உயிர்க்கோளம், பாறைக் கோளம், நீர்க் கோளம், வளிக்கோளத்தை உள்ளடக்கிய புவியின் நான்காவது கோளமாகும்.
- கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள இக்கோளம் தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
2. சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?
விடை:
- பல்வேறு உயிரினங்களின் தொகுதி ‘சூழ்நிலை மண்டலம்’ ஆகும். இம்மண்டலத்தில் வாழ்கின்ற, உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.
- சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோளம் வரை (எ.கா. விவசாய நிலம், வனச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.
3. உயிரினப் பன்மை என்றால் என்ன?
விடை:
ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பது ‘உயிரினப் பன்மை’ ஆகும். எ.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்.
4. “உயிரினப் பன்மை இழப்பு” என்பதன் பொருள் கூறுக?
விடை:
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு ‘உயிரினப் பன்மையின் இழப்பு’ எனப்படும்.
5. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்.
- வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
- வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி
- பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி
- மித வெப்பமண்டலப் பல்லுயிர்த் தொகுதி.
- தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.
V. காரணம் கூறுக:
1. உற்பத்தியாளர்கள், தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஏனெனில்,
உற்பத்தியாளர்கள் சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் ஆகும். இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. (எ.கா.) தாவரங்கள், பாசி, பாக்டீரியா.
2. உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
விடை:
ஏனெனில்,
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சூழ்நிலை மண்டலம் விவசாய நிலம், குளச் சூழ்நிலை மண்டலம், வனச் சூழல் அமைப்பு மற்றும் பிற சூழ்நிலை மண்டலங்கள் என வேறுபட்டுக் காணப்படுகிறது. அனாலும் இங்க உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது.
VII. விரிவான விடையளி:
1. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
விடை:
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்.
- உயிரற்ற கூறுகள்
- உயிருள்ள கூறுகள்
- ஆற்றல் கூறுகள் என மூவகைப்படும்
உயிரற்ற கூறுகள்..
சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.
(எ.கா.) நிலம், காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு போன்றவை.
உயிருள்ள கூறுகள் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியவை.
- உற்பத்தியாளர்கள்
இவை தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய உயிரினங்கள். - முதல் நிலை நுகர்வோர் – தாவர உண்ணிகள்
- இரண்டாம் நிலை நுகர்வோர் – ஊன் உண்ணிகள்
- சிதைப்போர்கள் – சாறுண்ணிகள் எனப்படும். இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்சுடியவை.
ஆற்றல் கூறுகள் (Energy Components)
உயிர்க்கோளம் முழுமைக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது சூரியன் ஆகும்.
அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும் ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் சூரிய ஆற்றல் பயன்படுகிறது.
2. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.
விடை:
சூழ்நிலை மண்ட லத்தின் செயல்பாடுகள் (Functions of an ecosystem)
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு
- ஆற்றல் மட்டம்
- உணவுச் சங்கிலி
- உணவு வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.
ஆற்றல் மட்டம்.
ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
உணவுச் சங்கிலி.
உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்.
உணவு வலை.
உணவுச் சங்கிலிகள் (Food Chain) ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை (Food web) எனப்படுகிறது. (ஆற்றல் மட்டம் → உணவுச் சங்கிலி → உணவு வலை)
3. புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.
விடை:
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
- இங்கு காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும், இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன
- நீர்வாழ் உயிரினங்களின் மீதும் உயிரற்ற காரணகளின் தாக்கம் காணப்படுகிறது.
- நன்னீர்வாழ் பல்லுயிர்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகை உண்டு.
நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
- இத்தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இத் தொகுதி உயிரினங்கள் – தாவரங்கள்
- அல்லி
- தாமரை
- பாசியினத் தாவரங்கள் – விலங்குகள்
- ஆமை
- முதலை
- மீன் இனங்கள்.
கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக உள்ள இத்தொகுதி புவியில் காணப்படும் மிகப்பெரிய பல்லுயிர்த்தொகுதியாகும். இரண்டாம் வகை கடல்நீர்வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள் (coral reefs) உள்ளன. மனிதர்கள் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இத்தொகுதியில் காணப்படும் பிரச்சனைகள் அதிக அளவில் மீன்பிடத்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடல் மட்டம் உயர்தல்.
Other Important links for 9th Social Science Book Back Solutions Guide:
Click Here to Download Samacheer Kalvi 9th Social Science Book Back Answers –9th Social Science Book Back Answers in Tamil