Skip to content
Samacheer Books
  • Home
  • Samacheer Kalvi 1st to 5th Books
  • 6th to 12th Samacheer Kalvi Books
  • Home
  • Book Back
  • 9th Social Science History Chapter 11 in Tamil

Also see

  • 10th Previous Year Question Paper Tamilnadu
  • SSLC Public Exam Time Table 2023 Tamil Nadu
  • 11th Public Exam Time Table 2023 Tamil Nadu
  • 12th Public Exam Time Table 2022 to 2023 Tamil Nadu
  • 6th Civics Term 3 Unit 3 Solutions in Tamil
  • 6th Civics Term 3 Unit 2 Solutions in Tamil
  • 6th Civics Term 3 Unit 1 Solutions in Tamil
  • 6th Geography Term 3 Unit 3 Solutions in Tamil
  • 6th Economics Term 2 Unit 1 Solutions in Tamil
  • 6th Geography Term 3 Unit 2 Solutions in Tamil




9th Social Science History Chapter 11 in Tamil

Book Back, Book Back Questions and Answers / By Kavi

Samacheer Kalvi 9th Social History Chapter 11 Answers Solutions in Tamil:

Samacheer Kalvi 9th Standard New Social Science in Tamil Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. 9th standard new Syllabus 2022 to 2023 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. Samacheer Kalvi Class 9 Social History Book Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Answers/Solutions in English are provided on this page. 9th Std New Social History Book consists of 11 units, Geography Book consists of 8 units, Civics book portion consists of 6 units, Economics book portion consists of 5 units, All Social Science Book Back One, and Two Mark Answers/Solutions Guide in Tamil Medium are given below.




Check Unit wise and  Samacheer Kalvi 9th Social Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Samacheer Kalvi Class 9th Std Social Book Back Answers PDF. Check Social Science – History, Geography, Civics, Economics Answers below. See below for the 9th New Syllabus Book Back Solution guide free PDF download:

 

Samacheer Kalvi 9th Social Science Book Back Solutions Guide Tamil Medium:

Samacheer Kalvi  9th std Social History Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and Solutions/Answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 9th Social Science History Chapter 11 – ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் in Tamil is given below.

9th History (வரலாறு) Book Back Solution Tamil

அலகு 11 – ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பிரான்ஸிஸ் லைட் ……. பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அ) நறுமணத் தீவுகள்
ஆ) ஜாவா தீவு
இ) பினாங்குத் தீவு
ஈ) மலாக்கா
விடை: இ) பினாங்குத் தீவு

2. 1896 இல் …… நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஆறு
விடை: அ) நான்கு

3. இந்தோ – சீனாவில் …… மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.
அ) ஆனம்
ஆ) டோங்கிங்
இ) கம்போடியா
ஈ) கொச்சின் – சீனா
விடை: ஈ) கொச்சின் – சீனா

4. ……… பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ் பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.
அ) டிரான்ஸ்வால்
ஆ) ஆரஞ்சு சுதந்திர நாடு
இ) கேப் காலனி
ஈ) ரொடீஷியா
விடை: அ) டிரான்ஸ்வால்

5. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்………..
அ) போர்த்துகீசியர்
ஆ) பிரெஞ்சுக்காரர்
இ) டேனிஷார்
ஈ) டச்சுக்காரர்
விடை: அ) போர்த்துகீசியர்

6. எத்தியோப்பியா இத்தாலியை …….. போரில் தோற்கடித்தது.
அ) அடோவா
ஆ) டஹோமி
இ) டோங்கிங்
ஈ) டிரான்ஸ்வால்
விடை: அ) அடோவா

7. ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ……
அ) ஒப்பந்தத் தொழிலாளர் முறை
ஆ) அடிமைத்தனம்
இ) கடனுக்கான அடிமை ஒப்பந்தம்
ஈ) கொத்தடிமை
விடை: இ) கடனுக்கான அழமை ஒப்பந்தம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்:

1. ………….. மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.
விடை: பெர்லின் குடியேற்ற

2. வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு …… என்றழைக்கப் படுகிறது.
விடை: நிரந்தர நிலவரித்திட்டம்

3. ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது …………. ஆகும்.
விடை: நிலவரி

4. தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் ………… வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.
விடை: நாட்டுக் கோட்டைச் செட்டியார்

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்:

1. i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.
ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.
iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.
iv) ஒடிசா பஞ்சம் 1878 – 76 இல் நடைபெற்றது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும்
iii) சரி
ஈ) iv) சரி
விடை: அ) i) சரி

2. i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைப்பற்றினர்.
ii) மலாக்காவைக் கைப்பற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.
iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.
iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.
அ) i) சரி
ஆ) i) மற்றும்
ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
விடை: இ) iii) சரி

3. கூற்று : சென்னை மகாணத்தில் 1876 – 1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.
காரணம் : காலனியரசு உணவு தானிய வணிகத்தில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை: ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

4. கூற்று : பெர்லின் மாநாடு இரண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
காரணம் : பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை: அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.




IV. பொருத்துக:

1. லியோபோல்டு        – அ) எத்தியோப்பியா
2. மெனிலிக்                  – ஆ) வியட்நாம்
3. சிசல் ரோடெஸ்       – இ) பெல்ஜியம்
4. வங்காளப் பஞ்சம்  – ஈ) கேப் காலனி
5. போ தெய்                    – உ) 1770

விடை: 1 – இ  , 2 – அ  , 3 – ஈ , 4 -உ  , 5 – ஆ 




V. சுருக்கமாக விடையளிக்கவும்:

1. காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.
விடை:

9th Social Book Back Answers in Tamil

2. ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள்.
  • தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜூலு மக்களுக்கென ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்கா ஜூலு முக்கியப் பங்காற்றினார்.
  • ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைக் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர்.
  • ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை.
  • அவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆழமாக நிலை கொண்டுவிட்ட இனப்பாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.

3. இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.
விடை:
அ. முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்
ஆ. இரண்டாம் கட்டம் : தொழில்துறை முதலாளித்துவம்.
இ. மூன்றாம் கட்டம் : நிதி மூலதன முதலாளித்துவம்.

4. கர்னல் பென்னிகுயிக்
விடை:

  • கர்னல் பென்னிகுயிக் : பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளர், குடிமைப்பணியாளர், சென்னை மாகாணச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆவார்.
  • மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்ப முடிவு செய்தார். கிழக்கு நோக்கித் திருப்பினாள் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார்.
  • பென்னி குயிக்கும் மற்றும் ஆங்கிலேய பொறியாளர்களும் அணையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போது இடைவிடாத மழையால் இடையூறுகள் ஏற்பட்டன.
  • ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான நிதியைப் பெறமுடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு 1895ல் அணையைக் கட்டி முடித்தார்.

5. தாயகக் கட்டணங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.
விடை:

  • தாயகக் கட்டணங்கள் : என்னும் பெயரால் பெருமளவு பணத்தை இங்கிலாந்திற்கு அனுப்பியது. தாயகக் கட்டணங்கள் – கம்பெனி பங்குதாரர்களுக்கு சேரவேண்டிய லாபத்தில் பங்கு.
    • வாங்கிய கடனின் மீதான வட்டி
    • ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு
    • அதிகாரிகளுக்கான ஓய்வூதியம்
    • லண்டனின் இந்திய அலுவலகத்திற்கான செலவுகள்.
    • போக்குவரத்து செலவு
      (காலப்போக்கில் தாயகக் கட்டணங்கள் ஆண்டொன்றுக்கு 16 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது. இது தவிர தனி நபர்கள் அனுப்பிய பணம் 10 மில்லியன் பவுண்டுகள்)

VI. விரிவாக விடையளிக்கவும்:

1. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
விடை:
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார தாக்கம் வேளாண்மைச் சூழல் :
அ) நிரந்தர நிலவரித் திட்டம் :

  • காரன்வாலிஸ் பிரபு
  • இந்தியாவில் முதன் முறையாக ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் என்னும் வர்க்கத்தார் உருவாக்கப்பட்டனர். இவர்கள் நில உரிமையாளர்களாக சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்க, வாரிசாக நிலங்களைப்பெற உரிமை பெற்றனர். விவசாயகிள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
  • வங்காளம், பீகார், ஓடிசா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.

ஆ) ரயத்துவாரி முறை :

  • தென்னிந்தியாவில் அறிமுக செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறை ரயத்துவாரி முறை எனப்பட்டது.
  • தனி நபருக்குச் சொந்தமான நிலங்கள் பதிவு செய்யப்பட்டன. நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார். நிலவரி செலுத்தத் தவறினால் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதோடு, அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும், பிற உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.

நிலவரி வருவாயும், விவசாயிகள் வறுமைக்கு ஆளாக்கப்படுதலும்

அ) நிலவரி :
ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த நிலவரி பலவந்தமான முறைகளில் வசூல் செய்யப்பட்டது.

ஆ) வட்டிக்கடைக்காரர்கள் :
அரசாங்கம் கடன் வசதிகள் செய்து தராததால் விவசாயிகள் வட்டிக்கடைக்காரர்களையே சார்ந்திருந்தனர். வறட்சி, வெள்ளம், பஞ்சம் போன்ற காலங்களில் வட்டிக்குக் கடன் வழங்குவோரின் தயவையே நம்பியிருந்தனர்.

இ) வேளாண்மை வணிகமயமாக்கல் :
காலனியரசு “வேளாண்மையை வணிகமயமாக்கும்” கொள்கையைப் பின்பற்றியது. வணிகப் பயிர்களான பருத்தி, சணல், வேர்க்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, புகையிலை ஆகியன சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப லாபகரமான விலையைப் பெற்றிருந்தன. விவசாயி சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியது.

நீர்பாசனம் :
ஆங்கிலேயர்கள் 19ம் நூற்றாண்டின் முதல் பாதி காலப்பகுதியில் நீர்ப்பாசனத்தைப் புறக்கணித்தனர்.

பஞ்சங்கள் :
ஆங்கிலேயரின் சுதந்திர வணிகக் கொள்கையும், கடுமையான வள வசூல் முறையும் பஞ்சங்கள் தோன்றுவதற்கு
வழியமைத்துக் கொடுத்தன. (ஓடிசா பஞ்சம் – 1866 – 67, மிகப்பெரும் பஞ்சம் – 1876 – 78)

2. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்பட்டதை விவரி.
விடை:
ஆப்பிரிக்கா காலனியாதல் :

  • ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றியக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது (1881-1914) ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
  • 1875க்கு முன்னர் சகாராவிற்கு தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறிப்படாமலே இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா :

  • ஆங்கிலேயர் பகுதிகள் – நேட்டால், கேப் காலனி,
    டச்சுக்காரர் (உள்நாட்டில் போயர்) பகுதிகள் – டிரான்ஸ்வால், சுதந்திர ஆரஞ்சு நாடு.
  • 1886ல் டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் பிரிட்டிஷ் சுரங்க வல்லுனர்கள் பெரும் எண்ணிக்கையில் ஜோகன்னஸ் பார்க் மற்றும் அதன் சுற்றப்புறங்களில் குடியேறத் தொடங்கினர். போயர் அவர்களைக் கண்டு அச்சம் கொண்டு அவர்களை வெறுத்தனர். அந்நியர் என்றே அழைத்தனர்.
  • கேப் காலனியின் பிரதமர் டிரான்ஸ்வாலுக்கு வடக்கே ஆங்கிலேயரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தனர். இது ஆங்கிலேயருக்கும் போலருக்கும் இடையிலான உறவை சீர்குலைத்தது. இதனால் போயர் போர்கள் நடைபெற்றன. 26000 போயர் மக்கள் உணவு, படுக்கை, மருத்துவ வசதி, சுகாதார வசதி பற்றாக்குறை காரணமாக மரணமடைந்தனர்.
  • 1909ல் நான்கு நாடுகளும் ஒன்றாக இணைவதற்கு ஒப்புக்கொண்டதால் தென்னாப்பிரிக்கா என்ற நாடு உதயமானது.

ரொடிசியா :
1889ல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்கா கம்பெனியின் வெள்ளையினக் குடியேறிகளுக்குப் பண்ணை நிலங்கள் வழங்கப்பட்டன. இருப்புப்பாதைப் போக்குவரத்தும் தந்தி முறையும் மேம்படுத்தப்பட்டன. இக்குடியேற்றம் பின்னர் சிசில் ரோட்ஸ் பெயரால் ரொடீசியா என அழைக்கப்பட்டது

மேற்கு ஆப்பிரிக்கா:
ஆங்கிலேயர் :
1854ல் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி அரசுகள் ஆங்கிலேயரின் காலனியானது நைஜீரியா அடிமைச் சந்தையாகப் பயன்பட்டது.
1886ல் உருவாக்கப்பட்ட ராயல் நைஜர் கம்பெனி 1900ல் ஆங்கிலேய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரெஞ்சுக்காரர்:
செனிகல் பிரான்சின் தளமாக இருந்து வந்தது
பின்னர் கினியா, ஜவரி கோஸ்ட், டகோமெஸ் ஆகிய சகாராவுக்கு தெற்கேயுள்ள பகுதிகளோடு இணைக்கப்பட்டன.

கிழக்கு ஆப்பிரிக்கா
ஆங்கிலேயர் :
ஜான்ஜிபார் சுல்தானுக்குச் சொந்தமான பகுதிகள் இங்கிலாந்தின் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிரிவகிக்கப்பட்டது.

ஜெர்மனியர் :
ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்கா என பின்னர் உருவான பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவினர். ஆப்பிரிக்ர்கள் ஜெர்மானியர்களால் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

போர்த்துகீசியரின் அங்கோலா மற்றும் மொசாம்பிக் :
போர்த்துகீசியர் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே கினியாவை பயன்படுத்தி வந்தனர்.1870க்குப் பின்னர் போர்த்தக்கீசியர் பெரும் எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்காவின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அமைந்திருந்த அங்கோலா, மொசாம்பிக் பகுதிகளில் குடியேறினர்.

Other Important links for 9th Social Science Book Back Solutions Guide:

Click Here to Download Samacheer Kalvi 9th Social Science Book Back Answers –9th Social Science Book Back Answers in Tamil




Post navigation
← Previous Post
Next Post →
Copyright © 2023 Samacheer Books