9th Tamil Unit 2.1 Book Back Questions with Answers

Samacheer Kalvi 9th Tamil Book Back Answers 2.1 Book Back Questions with Answers:

Samacheer Kalvi 9th Std  Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 9th Standard New Tamil Syllabus 2022 – 2.1 நீரின்றி அமையாது உலகு Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 9th Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 9th Tamil Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

9th Tamil Book Back Answers

Chapter 2.1 – நீரின்றி அமையாது உலகு

கற்பவை கற்றபின்

1. நீரின்று அமையாது உலகு, நீரின்று அமையாது யாக்கை இவ்விரண்டு தொடர்களையும் ஒப்புமைப்படுத்தி வகுப்பில் கலந்துரையாடுக.
விடை:

9th tamil book back questions with answer

2. வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? இதற்கான நீர் எங்கிருந்து வருகிறது? இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தண்ணீர் போதுமானதாக இருக்கும்? என்பவற்றுக்கான தகவல்களைத் திரட்டி ஒப்புடைவு உருவாக்குக.
விடை:

 • நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் தண்ணீ ருக்கு ஆதாரமாக இருப்பது நிலத்தடி நீர்,
 • அணைகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், கிணற்றுநீர் ஆகியவை ஆகும்.
 • ஆழ்குழாயில் வரும் நீரின் வேகத்தைப் பொறுத்து அஃது எவ்வளவு நாள் வரும் என கணக்கிடப்படும்.

அணைகளின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்று கூறுவர். அணைகளில் வெளியேறும் நீர்வரத்து நீரை அடிப்படையாகக் கொண்டும், வானிலை அறிக்கை தெரிவிக்கும் மழையின் போக்கைக் கொண்டும், ஒரு மாதத்திற்கு போதுமானது….. எத்தனை நாட்களுக்கு பிரச்சனையின்றி நீர் வழங்கலாம் போன்றவை முடிவு செய்யப்படும்.

அதன் அடிப்படையில் மக்களின் குடிநீர், பயன்படுத்தும் நீரின் தேவை பூர்த்தி செய்யப்படும்.
பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி
ஆ) ஆறு
இ) இலஞ்சி
ஈ) புலரி
விடை:
ஈ) புலரி

2. பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை – ஒளவையார்
இ) மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
i) அ, இ, ஆ
ii) ஆ, இ, அ
iii) ஆ, அ , இ
iv) அ, ஆ, இ
விடை:
iv) அ, ஆ, இ

குறுவினா

1. “கூவல்” என்று அழைக்கப்படுவது எது?
விடை:
உவர்மண் (களர்மண்) நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு கூவல் என்று பெயர்.

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
ஆழிக் கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
இலஞ்சி – பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
ஊருணி – மக்கள் பருகு நீர் உள்ள நீர்நிலை
கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
பூட்டைக் கிணறு – கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

3. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
விடை:
காடும் உடையது அரண்
– இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும்.

சிறுவினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
விடை:

 • ஐம்பூங்களுள் ஒன்று நீர். அது நிலம், காற்று, நெருப்பு வானம் ஆகிய நான்குடன் தொடர்பு
 • கொண்டு இயங்கவல்லது. நம் முன்னோர் கிடைத்த நீரை அளவோடு பயன்படுத்தினர்.
 • அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.
 • ‘குளம் தொட்டு வளம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர். இன்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
 • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும். இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

2. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
விடை:

 • குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டன.
 • சோழர்காலத்தில் நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை (ஏரி நீர்க்கழிவு) அடைந்து குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
 • குமிழித்தூம்பில் இரண்டு துளைகள் இருக்கும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து
 • நீர் வெளியேறும். கீழே இருக்கும் சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வாரத் தேவையில்லை .

நெடுவினா

1. நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக் காட்டுடன் விவரி.
விடை:
முன்னுரை:
‘நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு’

ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. எத்தகைய சிறப்புகளை உடையவர்களுக்கும் நீர் இல்லையேல் ஒழுக்கங்கள் அமையா. எனவே மழையின்றி ஒழுக்கம் நிலை பெறாது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை உழவுக்கு உதவுகிறது:
மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன. ” நிலமும் மரமும் உயிர்களும் நோயின்றி வாழ வேண்டும் என்ற புலவர்களுள் ஒருவரான மாங்குடி மருதனார் கூறியதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், வடிவமைக்கப்பட்டிருந்தது, இதில் ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்களாகப் பயன்பட்டன.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே:
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

உலகச் சுகாதார நிறுவனம், “உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் தொடரும் நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டியது உடனடித் தேவையாகும். ஆண்டுதோறும், பெறுகின்ற மழைப்பொழிவை ஆக்கநிலையில் பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பல்லுயிர்ப் பாதுகாப்பு:
உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

நிறைவுரை:
உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அந்த நீரே உணவாகவும் இருக்கிறது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

என்று கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

Other Important Link for 9th Tamil Book Back Answers:

Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Answers – Samacheer Kalvi 9th Tamil Book Back Solutions

Click Here to download the complete 9th Books PDF in English and Tamil Medium – Samacheer Kalvi 9th Books PDF Download