Samacheer Kalvi 9th Tamil Book Back Answers 7.1 Book Back Questions with Answers:
Samacheer Kalvi 9th Std Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. 9th Standard New Tamil Syllabus 2022 – 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Tamil Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 9th Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 9th Tamil Book back Solutions/Answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil Solution guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
9th Tamil Book Back Answers
Chapter 7.1 – இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
1. நீங்கள் நாட்டிற்கு உங்கள் பங்கினை அளிக்க விரும்புகிறீர்களா? இந்திய இராணுவத்தில் சேருவதற்கான தகுதி அவர்களுக்கான பணிகள் குறித்த கருத்துகளைத் திரட்டி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள் : ஆசிரியர், மணிமாறன், மதிமாறன், எழில் ஆகியோர்.
மணிமாறன் : ஐயா! இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற இக்கட்டுரையைப் படித்தவுடன், எனக்கும் இராணுவத்தில் சேர ஆசையாக உள்ளது.
மதிமாறன் : எனக்கும் தான் ஐயா!
எழில் : ஐயா! எனக்கும்தான்! பெண்களும் சேரலாம் தானே ஐயா!
ஆசிரியர் : எல்லோருமே சேரலாம் எழில்..
மணி : ஐயா! அதற்கான வழிமுறைகள் தகுதிகள் என்ன ஐயா…
ஆசிரியர் : 1 பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(இது குறைந்தபட்ச கல்வித்தகுதி) கல்வித் தகுதிக்கு ஏற்ப பணிகள் உண்டு.
மதிமாறன் : ஐயா… உடல் தகுதிகள் பற்றி
மணிமாறன் : நன்கு உயரமாக வேண்டுமா?ஐயா!
ஆசிரியர் : 157.5 செ மீ உயரம் இருக்க வேண்டும். எந்த வகையான உடற்கோளாறும் இருக்கக்கூடாது.
எழில் : ஐயா பெண்களுக்கு…
ஆசிரியர் : 1 பெண்கள் இராணுவத்தில் சேர ‘வுமன் என்ட்ரி’ உள்ளது. அதன் மூலம் சேரலாம்.
மதிமாறன் : ஏதாவது தேர்வு எழுத வேண்டுமா?
ஆசிரியர் : ஆமாம் மாறா! என். டி. ஓ. எனப்படும் தேர்வு எழுத வேண்டும்.
மணிமாறன் : எப்போது தேர்வு நடக்கும் ஐயா!
ஆசிரியர் : ஏப்ரல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.
‘எழில்: ஐயா! தேர்வில் தேர்ச்சியடைந்தால் உடனே சேர்ந்து விடலாமா?ஐயா.
ஆசிரியர் : தேர்ச்சி பெற்றபின், ஓராண்டு இராணுவப் பயிற்சி தொழில்நுட்ப பயிற்சி 3 ஆண்டுகள் பணி வழங்கப்பட்ட பின் ஓர் ஆண்டு பயிற்சி என ஐந்து ஆண்டுகள் பயிற்சியளிக்கப்பட்டு முறைப்படி இராணுவப் பணியில் சேர்க்கப்படுவர்.
மதிமாறன் : இராணுவ வீரர்களின் பணிகள் என்னென்ன ஐயா!
ஆசிரியர் : நாட்டையும், மக்களையும் காப்பது, எல்லைக் கண்காணிப்பு பயங்கரவாத எதிர்ப்புப்பணி, அரசு விழாக்களுக்கு பாதுகாப்பு, அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட உதவுதல், இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணி மற்றும் நிர்மாணிப்புப் பணிகள் மலைப்பகுதி, காடுகளில் கட்டுமான பணிகள். இவ்வாறு ராணுவ வீரர்கள் செய்யும் பணிகள் பலவாகும்.
மணிமாறன் : ஐயா! கேட்க கேட்க எனக்கும் அதில் இணைய வேண்டும் என்ற ஆவல் மிக்கெழுகிறது ஐயா!
எழில் : வணக்கத்துக்கும், பாராட்டுக்கும் உரிய தியாகப்பணியாம் ராணுவப் பணியில் நானும் என்னை அதில் இணைத்துக் கொள்வேன் ஐயா.
மதிமாறன் : ஐயா! உங்கள் விளக்கம் எங்கள் ஐயங்களைப் போக்கியதோடு எங்கள் மனதில் நாட்டுப்பற்றையும் ஊட்டி விட்டது.
மூவரும் : நன்றி ஐயா!
2. எனக்குப் பிடித்த விடுதலை போராட்ட வீரர் என்ற தலைப்பில் அவர் தம் வாழ்க்கை நிகழ்வுகளைக் காலக்கோட்டில் உருவாக்குக
Answer:
எனக்குப் பிடித்த விடுதலைப் போராட்ட வீரர் “சுப்பிரமணிய சிவா” அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் குறிக்கும் காலக்கோடு.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இந்திய தேசிய இராணுவம் ……….. இன் தலைமையில் ………. உருவாக்கினர்.
அ) சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்.
ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்.
இ) மோகன்சிங், ஜப்பானியர்.
ஈ) மோகன்சிங், இந்தியர்.
Answer:
இ) மோகன்சிங், ஜப்பானியர்.
2. கூற்று : இந்திய தேசிய இராணுவப் படைத்தலைவராக இருந்த தில்லான், ‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.
காரணம் : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.
அ) கூற்று சரி, காரணம் சரி.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று தவறு, காரணம் தவறு.
Answer: அ) கூற்று சரி, காரணம் சரி.
குறுவினா
1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?
Answer:
- கேப்டன் தாசன்
- ஜானகி
- அப்துல் காதர்
- இராஜாமணி
- சிதம்பரம்
- கேப்டன் லட்சுமி
- லோகநாதன்
- இராமு
2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
Answer:
நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.
3. ‘டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?
Answer:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தார். 1943-ஆம் ஆண்டு சூலை மாதம் 9ஆம் நாள் பொறுப்பை ஏற்கும்போது டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ (டெல்லி சலோ) எனப் போர் முழக்கம் செய்தார்.
சிறுவினா
1. குறிப்பு வரைக: டோக்கியோ கேடட்ஸ்.
Answer:
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.
இரண்டாம் உலகப் போர்ச்சூழலில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பர்மாவில் இருந்து காட்டு வழியாகப் பயணம் செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, படகு வழியாகத் தப்பி, கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அைைலகளில் சிக்கித் தவித்து 45 பேரும் ஜப்பானின் கியூசு தீவை அடைந்து பயிற்சி பெற்றனர்.
பனிபடர்ந்த மைதானத்தில் காலை 5 மணிக்கு குளிர் ஜீரோ (சுழியம்) டிகிரிக்கும் கீழ் இருக்கும் நிலையில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றனர். இவர்களே டோக்கியோ கேடட்ஸ் என்று அழைக்கப்பட்டனர்.
2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.
Answer:
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு பகுதி கார்கில். ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பகுதி. பனிபடர்ந்த இமயமலைப் பகுதி எப்பொழுதும் குளிர் சுழியத்திற்கு (-) கீழ்தான் இருக்கும்.
1999ஆம் ஆண்டு குளிர்காலத்தில் -20° குளிர்நிலவிய நிலையில் இந்திய இராணுவம் படைகளை மலை உச்சியில் இருந்து கீழே இறக்கியது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் கார்கிலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவினர். மாடு மேய்ப்போர் பாகிஸ்தான் இராணுவத்தினரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்திய ராணுவ கேப்டன் சவுரப் காலியாவிடம் தெரிவித்தனர். இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப்படை அசுரவேக தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து இந்திய கடற்படை.
போர் விமானங்களும் குண்டுகளை வீசின. மிக் 27, மிக் 21, எம்.ஐ. 17 ஆகிய 3 விமானங்களை இந்தியா இழந்தது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களில் 4000 பேரும் இந்திய தரப்பில் 527 பேரும் பலியானார்கள். போர் முடிவில் கார்கில் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களால் தான் நாம் நிம்மதியாக உறங்க முடிகிறது. பேரிடர் காலங்களில் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது.
நெடுவினா
1. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக.
Answer:
முன்னுரை:
இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் எனில் மிகையாகாது.
நேதாஜி அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது.
தூண்கள்:
1943ம் ஆண்டு, நேதாஜி “டெல்லி சலோ” என்ற முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை, பிரித்தானிய அரசை எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரிய தமிழர் ‘பசும்பொன் முத்துராமலிங்கதேவர்’ ஆவார்.
பசும்பொன் அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான் என்பவர், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் தான்” என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர்.
இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்:
இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன் லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகித்து பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது.
இரண்டாம் உலகப்போரில் தமிழர்:
இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.
“தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது” என்றார் சர்ச்சில், அதற்கு பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்றார்.
மரணம் பெரிதன்று:
1943-45 ஆம் ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீத்தனர்.
நேதாஜியின் பாராட்டு:
இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செய்த தியாகங்களையும் கண்டு வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம் நம் தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது.
முடிவுரை:
தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும், என்றென்றும் போற்றுவதோடு, இராணுவ வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமைகளாகும்.
Other Important Link for 9th Tamil Book Back Answers:
Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Answers – Samacheer Kalvi 9th Tamil Book Back Solutions
Click Here to download the complete 9th Books PDF in English and Tamil Medium – Samacheer Kalvi 9th Books PDF Download